“இந்த மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு வாய்ப்பு மட்டும் கொடுத்தால் போதும் பெரிய ஆளாக வருவார்” – ரோஹித் சர்மா நம்பிக்கை!

0
218

வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கடந்த 12ம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களிலேயே முடிவடைந்தது இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது .

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தனர். தனது அறிமுகப் போட்டியில் களம் இறங்கிய ஜெய் ஸ்வால் அபாரமாக விளையாடி 171 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

- Advertisement -

இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் பற்றி வெகுவாக பாராட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா. அவர் பற்றி பேசியிருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பேட்டிங் செய்ய இஷான் கிசான்க்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் இனி வரும் போட்டிகளில் அவருக்கே அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது பற்றிய தனது பேட்டியில் பேசியிருக்கும் ரோகித் சர்மா ” தனது முதல் போட்டியில் விளையாடிய இஷான் கிசானின் விக்கெட் கீப்பிங் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் அவர் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். அந்த ஆடுகளத்தில் சுழல் மற்றும் பவுன்ஸ் இருந்தது. அந்த இரண்டையும் கணித்து அவரது விக்கெட் கீப்பிங் மிகச் சிறப்பாக இருந்தது” என பாராட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” துரதிஷ்டவசமாக அவரால் அதிக நேரம் பேட்டிங் செய்ய இயலவில்லை. அணியின் டாப் ஆர்டர் நீண்ட நேரமாக விளையாடியதால் இஷான் கிசான்க்கு 20 பந்துகள் மட்டுமே கிடைத்தது. அவர் ஒரு ரன் எடுத்திருந்தபோது நாங்கள் டிக்ளர் செய்து விட்டோம். இனி வரும் போட்டிகளில் அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கும் . நிச்சயமாக அவர் அதிகளவிலான ரன்களை எடுப்பார் அதற்கு உண்டான திறமையும் அவரிடம் இருக்கிறது”என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் போட்டியை அணுகும் விதம் பற்றி பேசிய ரோஹித் ” இஷான் கிசான் உடன் போட்டி குறித்தும் எப்படி ஆட்டத்தை அணுக வேண்டும் என்பது குறித்தும் பேசினேன். அவர் ஒரு அதிரடி ஆட்டக்காரர் என்பதால் அவருக்கு நிறைய சுதந்திரம் வேண்டும். போட்டியை அதனுடைய அணுகுவதற்கு உண்டான திறமை அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கு அதை வெளிப்படுத்த சுதந்திரம் தேவைப்படுகிறது. அந்த சுதந்திரத்தை கொடுக்க அணி நிர்வாகம் ஆகிய நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என தெரிவித்தார்.

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பற்றி பேசிய அவர் அணியின் ஆடும் லெவனில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என தெரிவித்தார் . முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுடனே களம் இறங்க இருப்பதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்கும்போது அந்த வாய்ப்பு அதிக அளவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.