“கில் நீங்க இத பண்ணிதான் ஆகனும்.. ரோகித் சர்மாவை பார்க்க வேணாம்!” – முகமது கைஃப் அதிரடி அட்வைஸ்!

0
842
Gill

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நாளை இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து மகாராஷ்டிரா புனே மைதானத்தில் தனது நான்காவது போட்டியில் விளையாடுகிறது!

இந்திய அணியின் முதல் இரண்டு போட்டிகளை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தவறவிட்ட கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களம் இறங்கினார். சிறப்பான டச்சில் தெரிந்த அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்தில் அதிரடியாக துவங்குவதே தனது வேலை என்று வெளிப்படையாக அறிவித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளாக அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.

தற்பொழுது இவர்கள் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறும் பொழுது “கில் கொஞ்ச நேரம் களத்தில் செலவழிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரோஹித் சர்மா சரளமாக வேகமாகவே விளையாடுகிறார். எனவே கில் கொஞ்சம் நேரம் எடுக்கலாம். எனவே முதல் ஐந்து பத்து பந்துகளை பார்த்து விளையாடுங்கள். பிறகு தாக்கி விளையாடிக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் விக்கெட்டை காப்பாற்றி விளையாட வேண்டும். அதே சமயத்தில் அவர் வலையில் டிபென்ஸ் விளையாடி வருவதை கண்டேன். இது இந்திய அணிக்கு நல்ல விஷயம். ஆரம்பத்தில் அவர் சரியான பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விளையாடி பின்பு தாக்கி விளையாடலாம்.

- Advertisement -

கில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் பின் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்தார். பின்பு பாயிண்ட் திசையில் ஆட்டம் இழந்தார். அவர் அட்டாக் செய்து விளையாடுகிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு திரும்பி வரும் பொழுது கொஞ்சம் நேரம் எடுப்பதில் தவறு கிடையாது. 50, 60 ரன்கள் எடுத்து பார்ம் பெற்று நிலைப்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்த போட்டியில் கில் அதைச் செய்ய வேண்டும். அவர் ஸ்ட்ரைக்கை நன்றாக ரொட்டேட் செய்வார். பங்களாதேஷ் அணியில் நிறைய சுழற் பந்துவீச்சாளர்கள் வருவார்கள். அவர் நன்றாக சுழற் பந்துவீச்சை விளையாடுவார். வேகப் பந்துவீச்சுக்கு எதிராகவுமே அவர் நன்றாக விளையாடுவார்!” என்று கூறி இருக்கிறார்!