கில் ஸ்ரேயாஷ் கேஎல்.ராகுல்.. 3பேரில் விளையாட போகும் 2பேர் யார்? இங்கிலாந்து முதல் டெஸ்ட்

0
134
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் டெஸ்ட் பேட்டிங் யூனிட்டில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

- Advertisement -

அந்தக் குறிப்பிட்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக முதல் முறையாக கேஎல்.ராகுல் இடம்பெற்று இருந்தார். இரண்டாவது விக்கெட் கீப்பராக கேஎஸ்.பரத் இருந்தார்.

இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் மூவரும் சேர்ந்து விளையாட முடிந்தது.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் பேட்ஸ்மேனாக மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். விக்கெட் கீப்பர்களாக துருவ் ஜுரல் மற்றும் கேஎஸ்.பரத் 2 தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக ஒரு விக்கெட் கீப்பர் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டி இருப்பதால், மற்ற மூன்று பேட்ஸ்மேன்களில் இருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஒருவர் நீக்கப்படுவார். அந்த ஒருவர் யார் என்பதுதான் தற்பொழுது சுவாரசியமாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரராக சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதம் அடித்திருக்கிறார். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் கொஞ்சம் அடித்து விளையாட வேண்டும். கில் அந்த வகையில் விளையாட கூடியவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கு அடுத்து பொதுவாக சுழற் பந்துவீச்சில் அருமையான தடுப்பாட்டத்தை வைத்திருக்கக் கூடிய வீரராக ஸ்ரேயாஷ் ஐயர் இருக்கிறார். மேலும் அவர் சுழற் பந்து வீச்சை தாக்கி ஆடுவதிலும் சிறப்பான டெக்னிக் வைத்திருக்கிறார். எனவே இவர் ஐந்தாவது இடத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது.

கேஎல்.ராகுலுக்கு ஒரு பெரிய பின்னடைவு என்னவென்றால், அவருக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் தடுமாற்றம் இருக்கிறது. கடந்த முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது மிகவும் தடுமாறினார். எனவே கேஎல்.ராகுல் இந்திய பேட்டிங் யூனிட்டில் யாராவது விளையாட முடியாமல் போகும் பொழுது, விளையாட வைக்கப்படுவதற்கான மாற்று பேட்ஸ்மேனாக அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.