“கில் ஸ்ரேயாஸ் எல்லார் வாயையும் அடைச்சிட்டாங்க.. இனி நிமிர்ந்து நடப்பாங்க!” – நியூசிலாந்து லெஜெண்ட் பரபரப்பு பேச்சு!

0
458
Gill

நேற்று இந்திய அணிக்கு நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பகலில் வெப்பம் நிலவும் சூழ்நிலையில் இலங்கை கேப்டன் இப்படி ஒரு வாய்ப்பை இந்திய அணிக்கு கொடுத்தது அதிர்ஷ்டம்தான்!

இந்த நிலையில் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலையே கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை இந்திய அணி இழந்துவிட்டது. இதற்குப் பின்பு கில் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணியை சிறந்த முறையில் கரை சேர்த்தார்கள்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே ஒரே நேரத்தில் ஆட்டம் இழந்ததும் இந்திய அணிக்கு நெருக்கடி நிலை உருவாகிவிட்டது. இப்படியான நேரத்தில் வந்த ஸ்ரேயாஸ் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடினார்.

இறுதியாக அவர் 56 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அவர் தனது விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் தைரியமாக விளையாடினார். இதேபோல் சுப்மன் கில் 92 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய பேட்டிங் யூனிட்டில் இவர்களது பேட்டிங் ஃபார்ம் தான் கொஞ்சம் கவலைப்படும்படி இருந்தது. மேலும் ஸ்ரேயாஸ் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பலரும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் இருவரும் நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டால் கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் அவருடைய ரோல் என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். சில நாள் பெரியதாக கிடைக்கும் சில நாள் குறைவாக இருக்கும். அவர் அதிகம் ரிஸ்க் உள்ள ஷாட்களை விளையாடுகிறார்.

மேலும் அவர் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் வேகமாக ரன்கள் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு இந்த ரோல் மிகவும் வசதியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இந்திய பவுலர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் அங்கு கேள்வியே கிடையாது. இன்று கில் மற்றும் ஸ்ரேயா இருவரும் கீ பிளேயர்களாக இருந்தார்கள். இருவருமே தங்கள் மீது விமர்சனம் வைத்தவர்களை வாயடைக்க வைத்திருக்கிறார்கள்.

இப்போது இந்திய அணியின் எல்லா பெட்டிகளும் டிக் செய்யப்பட்டு விட்டது. ஸ்ரேயாஸ் உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ் விளையாடினார். இப்போது அவர் தலை நிமிர்ந்து நடப்பார். இப்பொழுது இவரும் விளையாடப்பட்டு விட்டதால் இந்திய அணியின் எல்லா பெட்டிகளும் நிரப்பப்பட்டு விட்டது!” என்று கூறியிருக்கிறார்!