“தம்பி கொஞ்சம் மரியாதை கொடுத்து விளையாடு” – சுப்மன் கில்லுக்கு ஏபி
டிவில்லியர்ஸ் அறிவுரை !

0
2564

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் மார்ச் மாதம் 31ஆம் தேதி துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்து அணிகள் பங்குபெறும் இந்த போட்டி தொடரில் அழைத்த அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் விளையாடிவிட்டன

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் ஆனது குஜராத் மற்றும் சென்னை அணிகளின் இடையேயான போட்டியுடன் தொடங்கியது . இந்தப் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடிய 36 பந்துகளில் 63 ரன்களை எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

- Advertisement -

கடந்த ஓர் ஆண்டுகளாகவே இந்தியா அணிக்கு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கில். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக சதம் எடுத்தார் . ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார் . நியூசிலாந்து அணியுடன் டி20 போட்டியிலும் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார் .

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகளையும் மிகச் சிறப்பாக தொடங்கி இருக்கிறார். இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. இந்த முறை அவற்றிற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக இருந்திருக்கிறது அவரது ஆட்டம் .

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும் 360 டிகிரி கிரிக்கெட் வீரருமான ஏ.பி டிவில்லியர்ஸ் சுப்மன் கில் பற்றி ஜியோ சினிமாவில் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் அந்தப் பேட்டியில் ” சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார் . அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்காக மிகச் சிறப்பாக தயாராகி இருப்பதை அவரது ஆட்டம் காட்டுகிறது . முதல் போட்டியிலேயே நல்ல ஸ்ட்ரைக் ரேட் உடன் மிகச் சிறப்பாக தொடங்கி இருக்கிறார் . இந்த ஆட்டத்தை அவர் தொடர் முழுவதும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய டிவிலியர்ஸ் ” சுப்மன் கில் இந்த சிறப்பான தொடக்கத்தை ஐபிஎல் போட்டிகள் முழுவதும் தொடர்வதற்கு அவரது ஃபார்மிற்கு மரியாதை கொடுத்து ஆட வேண்டும் என்று கூறினார். ஒரு பேட்ஸ்மேன் நல்ல ஃபார்மில் இருக்கும் போது தன்னுடைய ஃபார்மை மதிக்க வேண்டும் . அந்த ஒரு விஷயத்தை மட்டும் சுப்மன் கில் கடைபிடிப்பாரானால் அவரால் இந்தத் தொடர் முழுவதும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார் ஏ.பி டிவில்லியர்ஸ்.