அணியை காப்பாற்ற போராடும் குல்தீப்பை கேலி செய்த கில்-ரோகித்.. என்ன நடந்தது? ரசிகர்கள் கோபம்

0
1106
Kuldeep

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை காப்பாற்றுவதற்காக துருவ் ஜுரல் மற்றும் குல்தீப் யாதவ் பேட்டிங்கில் தற்பொழுது போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 353 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் 122 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார்.

- Advertisement -

இந்திய அணிக்கு இந்த முறையும் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 73 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார்.

இவர்கள் இருவரை தவிர மேல் வரிசையில் வேறு யாரும் குறிப்பிடும்படி விளையாடவில்லை. இந்திய அணி 86 ரன்னுக்கு ஒரு விக்கெட் என இருந்து, 177 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து சிக்கிக் கொண்டது.

இந்த நிலையில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் உடன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இணைந்தார். இந்த ஜோடி இன்றைய நாள் முடிவில் விக்கெட்டுகளை இழக்காமல் இந்திய அணியை மேற்கொண்டு 219 என்கின்ற ரன்னுக்கு கொண்டு சென்று இருக்கிறது.

- Advertisement -

இந்த ஜோடி 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. மேலும் 106 பந்துகளை எதிர் கொண்டிருக்கிறது. இதில் குல்தீப் யாதவ் மட்டுமே 17 ரன்கள் எடுப்பதற்கு 72 பந்துகளை சந்தித்து இருக்கிறார்.

ஆனால் இவருக்கு முன்பாகவே களம் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த துருவ் ஜுரல் 58 பந்துகளைச் சந்தித்து 30 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருடன் கடைசியில் சேர்ந்த குல்தீப் யாதவ், முக்கிய பேட்ஸ்மேனான ஜூரலை பந்துகளை சந்திக்க விடாமல், அவரை களத்தில் நிற்க வைத்து அழுத்தத்தை குறைத்து, தானே அதிக பந்துகளை சந்தித்து இந்திய அணிக்கு ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் ஆட்டமிழந்து சென்ற கில் மற்றும் ரோகித் இருவரும், குல்தீப் யாதவ் பேட்டிங் செய்யும் முறையை பெவிலியனில் இருந்தபடி கேலி செய்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியது. இதைப் பார்த்த ரசிகர்கள், பொறுப்பாக விளையாடாமல் ஆட்டமிழந்து சென்று விட்டு, அணியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் குல்தீப்பை கேலி செய்வதா? எனக் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.