கில் ஜெய்ஸ்வால்?.. கோலி விஷயத்தில் பிசிசிஐ மௌனம்.. புது தலைவலியில் ரோகித்!

0
302
Rohit

2024 ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை அட்டவணையை இன்று ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. பாகிஸ்தான் இடம் பெற்றுள்ள குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை சந்தித்து விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் இந்த மாதம் இந்தியாவில் ஜனவரி பதினொன்றாம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயான வெள்ளைப் பந்து தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டி20 தொடரே டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் சர்வதேச டி20 தொடராகும். எனவே இந்திய அணிக்கு இது முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

இந்திய டி20 அணிக்கு சில காலமாக கேப்டனாக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் துணை கேப்டனாக இருந்து வரும் சூரியகுமார் இருவரும் காயத்தின் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் பிசிசிஐ டி20 உலக கோப்பைக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவையே விரும்புகிறது என்பதாக செய்திகள் வருகிறது. அவரும் டி20 உலகக் கோப்பையில் விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

ரோகித் சர்மா துவக்க வீரராக இடம்பெறுவார் என்றால் கில், ஜெய்ஸ்வால் இருவரில் ஒருவருக்குதான் அணியில் இடம் இருக்கும். இருவருமே ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடி வருகிறார்கள். ஒரு கேப்டனாக இந்த இடத்தில் முடிவெடுக்க வேண்டிய சங்கட்டமான இடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார்.

மேலும் பிசிசிஐ டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இடம் பற்றி பெரிய மௌனம் சாதித்து வருகிறது. அவர் விரும்பினால் விளையாடலாம் என்பது போல ஆரம்பத்தில் கூறப்பட்டது. தாமாக முன்வந்து முடிவு எடுக்காமல், விராட் கோலியை வெளியேற பிசிசிஐ நினைக்கிறது என்று கூறப்படுகிறது.

தற்பொழுது இந்திய தேர்வுக் குழுவுக்கு மிகப்பெரிய தலைவலி இதனால் உருவாகி இருக்கிறது. எல்லாம் தெளிவாக இருந்தாலே ஒரு உலகக் கோப்பையை வெல்வது மிகக் கடினமான விஷயம். இந்த நிலையில் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பைக்கு அணியைத் தேர்வு செய்வதிலே இவ்வளவு குழப்பங்கள் இருப்பது, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது!