இந்த இந்திய துவக்க வீரர் என்னுடைய ஃபேவரெட்; அது ரோகித் சர்மா இல்லை – ரஷீத் கான் சொல்வது இவரைத்தான்!

0
2236

சுப்மன் கில் எனக்கு மிகவும் பிடித்த இந்திய வீரர்களில் ஒருவர் என்று பெருமிதமாக பேசியிருக்கிறார் ரஷீத் கான்.

ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் 2022 ஐபிஎல் தொடர் மறக்க முடியாததாக அமைந்திருக்கிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினர். ஒன்றாக கோப்பையையும் கைப்பற்றினர்.

- Advertisement -

தொடர் முழுவதும் சுப்மன் கில் விளையாடிய விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இவருக்கு, ஏன் டி20 போட்டிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது? என்ற கேள்விகளும் எழுந்தது.

மேலும் டி20 உலககோப்பை தொடரில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் மட்டுமே துவக்க வீரர்களாக இருந்தனர். இவர்களுக்கு பேக்-அப் துவக்க வீரர்கள் எவரும் இல்லை. அந்த இடத்தில் ஏன் சுப்மன் கில் எடுத்துச் செல்லப்படவில்லை என்ற கேள்விகள் எழுப்பும் அளவிற்கு அபாரமாக செயல்பட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில் ஐபிஎல்-இல் சக அணி வீரர் ரஷீத் கான் சமீபத்திய பேட்டியில் சுப்மன் கில் பற்றி ஓரிரு வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

“முதலில் அவருடன் நான் ஒன்றாக அணியில் விளையாடியதை பெருமிதமாக கருதுகிறேன். அந்த அணியில் மிகக் கடினமான உழைப்பாளி கில். இவர் பயிற்சி செய்வதை அருகில் இருந்து பார்க்கும் பொழுது நமக்கும் அதே எனர்ஜி கிடைக்கும். கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். தொடர் முழுவதும் இவர் செயல்பட்ட விதம் எண்ணிப் பார்க்க முடியாது அளவிற்கு இருந்தது.

ஒரே அணியில் இருவரும் விளையாடுவதில் நினைத்து மகிழ்கிறேன். அவரைப் போன்ற ஒரு வீரருக்கு நான் வலைப்பயிற்சியில் பந்து வீசுவதையே கடினமாக கருதுகிறேன். போட்டியில் பந்துவீசி இருந்தால் எப்படி இருக்கும்? என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர் எனது அணியில் இருக்கிறார்.

எதிர்காலங்களில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராக வருவார்கள் என நான் நினைக்கும் வெகுசில வீரர்களில் இவரும் ஒருவர். இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுத் தருவார் என்று நம்புகிறேன்.” என பெருமிதமாக பேசினார்.