“கில் திறமையான வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதற்காக கே எல் ராகுல் போன்ற ஒரு வீரரை புறக்கணிப்பதா”? – தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கேள்வி!

0
185

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாட இருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியானது நாளை துவங்குகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விபத்தின் காரணமாக சில காலம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கே எல் ராகுல் சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடும்படியான ரன்களை குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு பதிலாக நல்ல ஃபார்மில் இருக்கும் கில் தான் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், கே எல் ராகுல் தான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி பேசியுள்ள அவர்” இந்தியாவில் அதிகமான திறமை உள்ள வீரர்கள் இருப்பதால் கடினமான முடிவுகளை சில நேரம் எடுக்க வேண்டி இருக்கிறது. அதற்காக கே எல் ராகுல் போன்ற ஒரு வீரரை அவர்கள் எப்படி புறக்கணிக்க முடியும்?” என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசியுள்ள அவர்” கில் ஒரு திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவர் சிறந்த வீரராக உருவாவதற்கு அவருடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ள சிறிது காலம் தேவைப்படும். இந்தப் பந்துகளை விட வேண்டும் எந்த பந்துகளை ஆட வேண்டும். எந்த மாதிரியான திசைகளில் ஈடுபட வேண்டும் என்பவை அனுபவங்களின் மூலம் நமக்கு கிடைக்கும்” என கூறி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” கில் ஒரு சிறந்த வீரர் அவர் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவங்களை பற்றி முதிர்ச்சி அடைந்த ஒரு வீரராக வருவார் என நான் உணர்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் கே என்ற ராகுல் போன்ற ஒரு வீரரின் அனுபவம் மற்றும் பேட்டிங் டெக்னிக் உடைய வீரரை இது போன்ற முக்கியமான தொடர்களில் இருந்து எப்படி புறக்கணிக்க முடியும்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

என்னை பொருத்தவரை அவர் போன்ற ஒரு வீரரை நிச்சயமாக நான் எனது அணியில் எடுத்துக் கொள்வேன் என தெரிவித்திருக்கிறார் ஸ்மித். நாளை நடைபெற இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா உடன் கில் களம் இறங்கத்தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கே எல் ராகுல் நடு வரிசையில் களம் இறக்கப்படலாம் எனவும் விமர்சகர்கள் கணித்திருக்கின்றனர்.