“கில் பெரிய பேட்ஸ்மேன்.. ஆனா அவர் இதை மட்டும் செய்யக்கூடாது.. இதான் பிரச்சனை” – சல்மான் பட் அட்வைஸ்

0
123
Gill

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக வரை, 2023 ஆம் ஆண்டு சுப்மன் கில்லுக்கு அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது.

உலகக் கோப்பை தொடர தொடங்கும் வேளையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை. மேலும் அந்த பாதிப்பு அவர் உடலில் தொடர்ந்து இருந்தது. எனவே அவரால் மீதி ஆட்டங்களில் உலகக் கோப்பை தொடரில் ஒரு சதம் அடிக்க முடியவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு திரும்பிய அவரால் டி20 தொடரில் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் டெஸ்ட் தொடரிலும் அவரது பேட்டிங் அவருடைய திறமைக்கு தகுந்தது போல் அமையவில்லை.

இந்த நிலையில் உள்நாட்டில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. இரண்டாவது போட்டியில் ஜெய்ஸ்வால் உடல்நலம் சீரானதும் அதிரடியாக கில் உடனே நீக்கப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் சுப்மன் கில் தற்போது என்ன மாதிரியான தவறுகளை செய்து வருகிறார் என்று, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தனது யூட்யூப் சேனலில் மிக விரிவாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

கில் குறித்து அவர் கூறும் பொழுது “கடந்த சில ஆட்டங்களில் கில் தன்னுடைய திறமைக்கு அநீதி இழைத்து விட்டார். அவர் மிகவும் திறமையான ஒரு வீரர். அவர் இருபது ரன்களை விரைவாக எடுக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு லூஸ் ஷாட் விளையாடுகிறார். அவர் மிக சிறப்பாக விளையாடிய காலங்களில் இப்படி செய்ததே கிடையாது.

அவர் பேட்டிங் செய்யும்பொழுது சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்காமல் சாதாரணமாக விளையாட வேண்டும். நீங்கள் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் உங்களால் எல்லாப் பந்தையும் விளையாட முடியாது. ஒவ்வொரு பந்தையும் உங்கள் விருப்பப்படி விளையாடுவதற்கு பதிலாக, பந்து எப்படி வருகிறது அதற்கு ஏற்றது போல் விளையாட வேண்டும்.

இதேபோல் அர்ஸ்தீப் சிங் புதிய பந்தில் சிறப்பாக வீசுகிறார். மேலும் ஷாகின் அப்ரிடி சிறப்பாக பந்து வீசி வந்த காலத்தில் வேகமாக வீசுவதோடு பந்தை ஸ்விங் செய்வார். இவரும் அப்படியே செயல்படுகிறார். மேலும் அந்த இரண்டு புறமும் ஸ்விங் செய்வது சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.