கில் மீண்டும் மீண்டும் அபார சதம் ! வலுவான நிலையில் இந்தியா !

0
1071
Gill

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் இன்று நடைபெற்று வருகிறது . ஆசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன . இசான் கிசான் சர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர் . இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியிலும் சிறப்பான ஒரு துவக்கத்தை இந்தியா அணிக்கு அமைத்துக் கொடுத்தனர் . முதலாவது விக்கெட் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 34 ரன்களில் டிங்கர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் .

இவரை அடுத்து ஆட வந்த இந்திய அணியின் இன்பார்ம் பேட்ஸ்மேன் விராட் கோலி இந்தப் போட்டியில் எட்டு ரண்களில் சேந்தனர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி அவுட் ஆனார் . இவரைத் தொடர்ந்து ஆட வந்த இசான் கிசான் ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார் .அடுத்தடுத்து விக்கெட் கள் விழுந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிக் கொண்டிருந்த சுப்மண் கில் தனது அரை சதத்தை கடந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார் .

இவர் அதிரடி மற்றும் நிதானம் என கலந்து சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . நான்காவது விக்கெட் இருக்கு இவரும் சூரியகுமார் யாதவும் இணைந்து 65 ரன்கள் சேர்த்திருந்தனர் . அப்போது மிச்சல் வீசிய பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 31 ரன்கள் ஆட்டம் இழந்தார் சூரியகுமார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் அபாரமாக ஆடி ஒரு நாள் போட்டியில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார் . இவர் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்தார் . தற்போது இந்த போட்டியிலும் சதம் அடித்து அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்த இந்தியா ஓட்டுனர் என்ற லிஸ்டில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் சௌரவ் கங்குலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருடன் தனது பெயரையும் இணைத்துக் கொண்டார் . 87 பந்துகளில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்த கில் 14 பௌடர்களையும் இரண்டு சிக்ஸர்களையும் அடித்திருக்கிறார் . இந்திய அணி தற்போது 30 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது . ஹர்திக் பாண்டியா மற்றும் சுக்மன் கில் ஆகியோர் களத்தில் உள்ளனர்