கில் ரோகித் ஏமாற்றி விட்டார்கள்; விராட் கோலி பாவம்” – ஹர்பஜன் சிங் விரக்தி பேச்சு!

0
468
Harbhajan

தற்பொழுது நடந்து வரும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வலிமையான முன்னிலையில் இருக்கிறது!

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அபாரமான சதம் அடித்து வலிமையான அடித்தளத்தை உருவாக்கித் தந்தார்கள். ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இதுவரையில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, புஜாரா, ஜடேஜா என முக்கிய விக்கெட்டுகளை இழந்து 38 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருக்கிறது.

தற்போது களத்தில் ரகானே மற்றும் பரத் இருக்கிறார்கள். ஃபாலோ-ஆனை தவிர்க்கவே இன்னும் 120 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியான நிலையில் இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பேசும் பொழுது “விராட் கோலியை ஆட்டம் இழக்க வைத்த ஸ்டார்க்கின் பந்து, இதுவரை நடந்த போட்டியில் வீசப்பட்ட மிகக் கடினமான பந்தாகும். ஏனெனில் பந்து மோசமான முறையில் பவுன்ஸ் ஆனது. இந்தப் பந்து வேறு எந்த பேட்ஸ்மேனையும் கடினப்படுத்தியே இருக்கும்.

- Advertisement -

இந்தியா பேட்டிங் செய்ய வந்தபொழுது ரோகித் சர்மா மற்றும் கில் இருவரின் பேட்டிங் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அவர்கள் அந்த நல்ல ஆரம்பத்தை தரவில்லை.

ஏற்கனவே சீற்ற பவுன்ஸ் கொண்ட இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமானது. ரகானே மற்றும் பரத் இருவரும் இன்று விதிவிலக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியா மீண்டு வர முடியும்.

ஐசிசி நிகழ்வுகளில் இந்திய அணியால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டு வருகிறோம். இந்த இறுதிப் போட்டிகளும் பேட்ஸ்மேன்கள் சரியான வகையில் விளையாடவில்லை. ரகானே சண்டையிடுவார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு பாரத் மற்றும் தாக்கூர் இருவரிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்!