“கில் சின்னப் பையன்.. கேப்டன் பதவி எதுக்கு? இவருக்குதான் கொடுக்கனும்!” – ஏபி.டிவில்லியர்ஸ் அதிரடி கருத்து!

0
2133
Gill

மாநில அணிக்காக பஞ்சாப்புக்கு விளையாடிய 24 வயதான இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக பார்க்கப்படுகிறார். உதாரணமாக அடுத்த விராட் கோலி அவர்தான் என்று பரவலாக பல முன்னாள் வீரர்களும் கணிக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர் ஆரம்பத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடி வந்த பொழுது, அவர் இந்திய அணியில் இந்த அளவிற்கு பிரபலமான வீரராக இல்லை. இதன் காரணமாக அவரை தவறுதலாக கொல்கத்தா கழட்டிவிட்டது.

ஆனால் கில்லை ஏலத்தில் விடாமல் குஜராத் டைட்டன்ஸ் முன்கூட்டியே வாங்கிக் கொண்டது. அதற்குப் பிறகு அவரது ஆட்டம் இந்திய அணியில் மிகச் சிறப்பாக இருந்தது. அது அப்படியே குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் தொடர்ந்து.

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் பொழுது அவருடைய ஸ்டிரைக் ரேட் கீழே இருந்தது. அவர் ஆட்டத்தை பவர் பிளே தாண்டி முன்னெடுத்துச் செல்வதில் சிரமப்பட்டவராக தெரிந்தார். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் வந்து விளையாடிய பொழுது அவர் முற்றிலும் வேறு மாதிரியான வீரராக மாறினார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மூன்று சதங்களுடன் அவரே அதிக ரன் அடித்தவராகவும் வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற காரணத்தினால், குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அதிரடியாக அவரை கேப்டனாக அறிவித்திருக்கிறது. அதே அணியில் கேப்டன்சி செய்யக்கூடிய வகையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது ” குஜராத் டைட்டன்ஸ் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கேன் வில்லியம்சன் பெயரை பார்த்ததும், அடுத்து அவரை தான் கேப்டனாக கொண்டு வருவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் சுப்மன் கில்லை கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார்கள். அவருக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட இந்திய அணியில் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். அவருக்கு ஒரு நல்ல ஐபிஎல் சீசனும் அமைய வேண்டும்.

அவர்கள் அவரை கேப்டனாக கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள். இது பலன் அளிக்கவும் செய்யலாம். நான் இதை முழுமையாக தவறு என்று சொல்லவில்லை. கில் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டு 2025 ஆம் ஆண்டு கேப்டனாக வரலாம் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் அவர் அடுத்து எப்படி விளையாடுவார் அணியை முன்னின்று வழிநடத்துவார் என்று பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!