“எனக்கு பழகிடுச்சிங்க.. ஆனா இந்தியா உலக கோப்பை ஜெயிக்கனும்” – முதல்முறையாக மௌனம் கலைத்த சாகல்!

0
548
Chahal

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடதுகை, வலதுகை சுழற் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். சைனா மேன் சுழற் பந்துவீச்சாளரும் இருக்கிறார்.

தற்போது உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணியில் வலது கை லெக் ஸ்பின்னர் கிடையாது. தொடர்ச்சியாக அணியில் வைக்கப்பட்டு இருந்த சாகல் உலகக் கோப்பை நேரத்தில் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கட்டாயம் சாகலை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து பேசி வருகிறார். மேலும் தற்போதைய இந்திய கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்றும் கூறியிருந்தார்.

மேலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங் கூறும் பொழுது, சாகலை விளையாட வைக்கவில்லை என்றாலும் கூட பதினைந்து பேர் கொண்ட அணியில் எடுத்திருக்க வேண்டும், அவரை எடுக்காதது தவறாக போய் முடியலாம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் உலக கோப்பையில் புறக்கணிக்கப்பட்டதற்கு பின்னால் இங்கிலாந்து சென்று கமிட்டி போட்டிகளில் விளையாடும் சாகல், மனம் திறந்து சில விஷயங்களை முதல்முறையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சாகல் கூறும் பொழுது
“15 வீரர்கள் மட்டுமே அணியின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஏனென்றால் இது உலகக்கோப்பை. இங்கு 17 அல்லது 18 வீரர்கள் இருக்க முடியாது. நான் கொஞ்சம் மோசமாக உணர்கிறேன். ஆனால் நான் முன்னேறி செல்ல வேண்டும். மூன்று உலகக் கோப்பைகளாக எனக்கு இது பழகிவிட்டது.

அதனால்தான் நான் இப்பொழுது இங்கிலாந்து விளையாட வந்தேன். ஏனென்றால் நான் எங்காவது எப்படியாவது கிரிக்கெட் விளையாட வேண்டும். சிவப்பு பந்தில் விளையாட இங்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்தியாவுக்காக நான் சிவப்பு பந்தில் விளையாட விரும்புகிறேன். இது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.

நான் பயிற்சியாளர்களிடமும் பேசினேன். நான் எங்காவது கிரிக்கெட் விளையாடுவதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.நீங்கள் வலைகளில் எவ்வளவு வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். ஆனால் மேட்ச் என்பது தனி. நான் இங்கு நல்ல நிலையில் விளையாடுகிறேன். மேலும் நிறைய கற்றுக் கொள்கிறேன்.

இந்திய அணியில் உள்ள சுழற் பந்துவீச்சாளர்களுடன் போட்டியிடுவது குறித்து நான் அதிகம் சிந்திக்கவில்லை. ஏனென்றால் நான் சிறப்பாக செயல்பட்டால், நான் இந்திய அணியில் இருப்பேன். எதிர்காலத்தில் உங்களுக்கு யாராவது மாற்றாக வருவார்கள். அந்த நேரம் என்றாவது ஒருநாள் வந்துதான் ஆக வேண்டும்.

நான் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறேன். நிச்சயமாக அணியில் மற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அதை நான் பாராட்டுகிறேன். இந்தியா வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். ஏனெனில் இது எனது தனிப்பட்ட ஆட்டம் கிடையாது.

நான் அணியில் அங்கம் வகிக்கிறேனோ இல்லையோ ஆனால் அவர்கள் என்னுடைய சகோதரர்களைப் போன்றவர்கள். நான் இந்திய அணியை ஆதரிக்கிறேன். சவாலை விரும்புகிறேன். நான் திரும்ப வருவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்!” என்று அது கூறுகிறது என்று கூறி இருக்கிறார்!