“கேஎல் ராகுலை டீம்ல எடுங்க இவரை ட்ராப் பண்ணுங்க” – ரசிகர்களை கோவப்பட வைத்த இர்பான் பதான் பேட்டி.!

0
786

16 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி பாகிஸ்தானில் வைத்து நடைபெற்றது.

இனி வரும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் மட்டுமே வைத்து நடைபெற இருக்கின்றது. இன்று நடைபெற இருக்கும் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை மீண்டும் எதிர்கொள்ள இருக்கிறது .

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட காரணத்தால் ரசிகர்கள் இந்த இரண்டாவது போட்டியை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இலங்கையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் ஆசிய கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் ரசிகர்களிடம் சந்தேகம் நிலவுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் மூன்று மாதங்களுக்குப் பின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல் தகுதியை நிரூபித்து தற்போது ஆசிய கோப்பை இரண்டாவது சுற்றில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக கொழும்பில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டார் ராகுல். அந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன்னாக ராகுல் விளையாட வேண்டுமா அல்லது இசான் கிசான் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மிகப்பெரிய விவாதம் ஏன் நடைபெற்று வருகிறது . பல கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னால் வீரர்களும் ஃபார்மில் இருக்கக்கூடிய இஷான் கிஷான் தொடர வேண்டும் என தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கேஎல் ராகுல் இந்தியா அணிக்காக ஐந்தாவது இடத்தில் ஆட வேண்டும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர் பார்மில் இருக்கிறாரா என்பது தெரியவரும். அவர் நல்ல பாம்பில் இருந்தால் உலக கோப்பையிலும் அவருடன் தொடரலாம். அவர் அவுட் ஆப் ஃபார்மில் இருந்தால் உலகக் கோப்பைக்கு இசான் கிசானை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக பேசி இருக்கும் இர்பான் பதான்” நாம் எல்லா விஷயங்களையும் எளிதில் மறந்து விடுகிறோம். அல்லது குறைவான அளவில் ஞாபகம் வைத்துக் கொள்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக ஐந்தாவது இடத்தில் கேஎல் ராகுல் எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இஷான் கிஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கேஎல் ராகுல் ஐந்தாவது இடத்தில் இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பினை நாம் மறந்து விடக்கூடாது. அதனால் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பளித்து பரிசோதிப்பது இன்றியமையாதது என தெரிவித்திருக்கிறார் இர்பான் பதான்.

மேலும் இந்திய அணி நிர்வாகம் இது தொடர்பாக எவ்வாறான முடிவை எடுக்கிறது என்று தெரியவில்லை . அவர்கள் இஷான் கிசானை அணியில் இருந்து நீக்கிவிட்டு கேஎல். ராகுலை விளையாட வைப்பார்களா? அல்லது கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு கேஎல். ராகுலுக்கு வாய்ப்பு தருவார்களா என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாக இருக்கிறது