“கூட்டிட்டு போங்க.. இந்த 26 வயசு பையன் மட்டும்தான் அதை செய்ய முடியும்” – ஸ்ரீகாந்த் கோரிக்கை

0
435
Srikanth

இந்திய டி20 அணிக்கு 14 மாதங்கள் கழித்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அழைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இதுவரையில் உருவாக்கப்பட்டு வந்த இந்திய டி20 அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.

தற்பொழுது இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இடம் பெறுவார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

- Advertisement -

இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஷேவாக் வெளியேறிய பிறகு, அவரைப் போன்ற ஒரு பிளாஸ்டர் இந்திய அணிக்கு இதுவரையில் கிடைக்கவில்லை. எல்லோரும் இன்னிங்சை நிலையாக விளையாடி எடுத்துச் செல்லவே பழக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இவருடைய இடம் உறுதி ஆகிறது.

இதற்கு அடுத்து விராட் கோலி இடம் பெறுவார். அடுத்தடுத்த மூன்று இடங்களில் சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா மற்றும் ஒரு விக்கெட் கீப்பர் என மொத்தம் ஆறு பேர் வந்து விடுவார்கள். ஹர்திக் பாண்டியா இல்லாமல் ஐந்து பந்துவீச்சாளர்கள் தேவை என்றால், இந்த அணியில் ரிங்கு சிங்குக்கு இடம் தர முடியாது.

தற்பொழுது இந்திய தேர்வாளர்களுக்கு இதுதான் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. ஹர்திக் பாண்டியா உடன் சேர்த்து ஐந்து பந்துவீச்சாளர்கள் என சென்றால் மட்டுமே ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு தர முடியும். இதனால் பேட்டிங்கில் எட்டு வரை நீளம் இருக்கும்.

- Advertisement -

ஒருவேளை பிளேயிங் லெவனில் சிங்குக்கு வாய்ப்பு தரப்படாது என்றால், அது இந்திய அணிக்கு பெரிய நஷ்டமாக போய் முடியும். ஏனென்றால் பினிஷிங் இடத்திற்கு எனவே உருவான ஒரு வீரராக அவர் இருக்கிறார். ஆட்டத்தை புரிந்து கொண்டு, மிகச் சரியாக நகர்த்தி, அதை முடிக்கும் விதத்தில், ஒரு மாஸ்டர் போல செயல்படுகிறார்.

ரிங்கு சிங் உலகக் கோப்பை வாய்ப்பு குறித்து பேசி உள்ள ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “ரிங்கு சிங் கண்டிப்பாக டி20 உலக கோப்பை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தே ஆகவேண்டும். கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்களை சுழற்றி அடிக்கிறார். அவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்.

அவர் ஆட்டம் இழக்காமல் விளையாடும் விதத்தைப் பாருங்கள். அவர் கண்டிப்பாக உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதோடு, ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் அற்புதமான வீரர். அவர் தன்னுடைய பேட்டிங்கை ரசித்து விளையாடுகிறார். சிரமம் இன்றி சிக்ஸர்கள் அடிக்கிறார்” என்று கூறியிருக்கிறார்