உலக கிரிக்கெட்

ஸ்டோக்ஸ் எங்க இங்கிலாந்து டீமை சர்க்கஸில் சேர்க்கலாம்.. ஐபிஎல்-லால் நடந்தது இதுதான் – பாய்காட் விமர்சனம்

கடந்த சில வருடங்களாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான மற்றும் பிரண்டன் மெக்கலம் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிரடியாக விளையாடி புதிய ரசிகர்களை உருவாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் அந்த அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. தற்போது இதுகுறித்து இங்கிலாந்து லெஜெண்ட் வீரர் ஜெஃப்ரி பாய்காட் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் ரசிகர்களை மகிழ்விப்பது எப்படி எனவும், அதிரடியாக விளையாடி ஆட்டத்தை ஒரேடியாக கையில் எடுப்பது பற்றியும் சிந்தித்து விளையாடக்கூடிய அணியாக மாறி இருக்கிறது. இவர்களது அதிரடியான முறைக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்த போதும் வெற்றிகள் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கிடைப்பதில்லை.

கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியா வந்திருந்த பொழுது முதல் டெஸ்ட் அதிரடியாக விளையாடி வென்றது. ஆனால் அவர்கள் அதே அணுகு முறையில் விளையாடியதால் அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று தொடர இழந்தார்கள். தற்போது இப்படி செய்வதற்கு பதிலாக இங்கிலாந்து அணியை சர்க்கஸில் சேர்த்து மக்களை மகிழ்விக்கலாம் என ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து ஜெஃப்ரி பாய்காட் கூறும் பொழுது ” கடந்த சில மாதங்களாக எடுத்துக் கொண்டால் இங்கிலாந்து அணி கரிபியனில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் மிகவும் சுமாராக விளையாடியது. ஐபிஎல் தொடர் எங்களுடைய ஆவரேஜ் டெஸ்ட் வீரர்களை பணக்காரர்களாக மாற்றியிருக்கிறது. இதற்கு முன்பாக இந்தியாவில் சிறப்பாக ஆரம்பித்த முதல் போட்டியை வென்று அதற்கு அடுத்து நான்கு போட்டிகளையும் தோற்றது.

- Advertisement -

கடந்த குளிர்காலத்தில் இந்தியாவில் எங்கள் இங்கிலாந்து வீரர்களை ஈகோ சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டது. அவர்கள் வெளியில் வந்து ஆட்டத்தின் முடிவுகள் பற்றி கவலை இல்லை ரசிகர்களை மகிழ்விப்பதுதான் முக்கியம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். தோல்வி எப்பொழுதும் வேடிக்கையானது கிடையாது.

இதையும் படிங்க : நாளை கில்லுக்கு ஓய்வா?.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அபிஷேக் ஜெய்ஸ்வால் ஓபனர்.. 2 மாற்றங்கள்

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் கண்காட்சி இல்லை. போட்டியில் முடிவு முக்கிய விஷயம் இல்லை என்று எங்கள் வீரர்கள் நினைக்கத் தொடங்கினால் அவர்கள் சர்க்கஸில் சேர்ந்து கொள்ளலாம். இல்லையென்றால் க்ளோப்ராட்டர்ஸ் கூடைப்பந்து அணியில் சேர்ந்து சிரித்து, கேலி செய்து, வித்தைகள் காட்டி தொந்தரவு செய்யாமல் உலகம் முழுவதும் செல்லலாம்” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by