இந்திய அணி தற்போது சுக்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறது. நாளை இந்த தொடரில் நான்காவது போட்டியில் நடைபெற இருக்கிறது. இதற்கான பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.
இந்திய அணி நடைபெற்று இருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டியை வென்று முன்னிலையில் இருக்கிறது. நாளை நான்காவது போட்டியை வென்றால் தொடரைக் கைப்பற்றி விடும். எனவே நாளை மிக முக்கியமான போட்டியாக இருப்பதால் முக்கிய வீரர்கள் அனைவருமே விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் சதம் அடித்திருந்த இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மூன்றாவது போட்டியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். கேப்டன் கில் தன்னுடைய தொடக்க இடத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டுத் தரவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையான விஷயமாக மாறியது.
தொடருக்கு முன்பாக அனைத்து வீரர்களுக்கும் சர்வதேச போட்டிக்கு நேரம் கிடைப்பதற்காக இந்த தொடர் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ரியான் பராக் இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு பெற்று வெளியே அமர வைக்கப்பட்டார். இதுவும் சர்ச்சையான விஷயமாகவே மாறி இருக்கிறது.
இந்த நிலையில் கேப்டன் கில் நாளை ஓய்வெடுத்து, அவருடைய இடத்தில் ரியான் பராக் உள்ளே வரவேண்டும், இந்தத் தொடரில் இதுவரை வாய்ப்பு பெறாத வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே விளையாட வேண்டும் என்பது சரியாக இருக்கும். ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கும் அபிஷேக் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரர்களாக வரவேண்டும்.
இதையும் படிங்க : நான் இளந்தளிர்.. அதனால அவரு சொல்றத அதிகமா கேட்க மாட்டேன்- உலகக்கோப்பையில் கலக்கிய அர்ஸ்தீப் சிங் பேட்டி
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நான்காவது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:
ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, ருதுராஜ், சஞ்சு சாம்சன், ரியான் பராக், சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், துஷார் தேஷ்பாண்டே மற்றும் கலீல் அகமது.






