வீடியோ.. என்ன மனுஷன்யா.. எனக்கு விக்கெட் வேணாம்.. பங்களாதேஷ் வீரரின் செயலால் நெகழ்ச்சியில் ரசிகர்கள்.!

0
280

பங்களாதேஷ் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற ஒரு நாள் போட்டித் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது.

அதற்குப் பின்னர் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலன் மற்றும் செய்போர்ட் ஆகியோர் களம் இறங்கினர்.

- Advertisement -

பின் ஆலன் 5 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஸ்லாம் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் செய்போர்ட் பங்களாதேஷின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அவர் 23 பந்துகளில் 43 ரன்கள் குவித்து 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சகிப் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் களமிறங்கிய மிச்சல் 24 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் குவித்துள்ளார். இவர் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு ஆட்டக்காரரான பிலிப்ஸ் 14 பந்துகளில் 9 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். தற்போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் நடுவே ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்த போட்டியின் இரண்டாவது ஓவரில் 5வது பந்தைஇஸ்லாம் வீச, அதனை டேரி மிட்சல் எதிர்கொண்டார். அவர் அடித்த பந்து எதிரே நின்ற சைபோர்ட் மீது மோதியது. அப்போது சைபோர்ட் நிலை தடுமாறி கிரீஸ் கோட்டிற்கு வெளியே விழுந்தார். அவர் சுதாரிப்பதற்குள் பந்தை பிடித்த இஸ்லாம் அருகே இருந்த ஸ்டம்பை நோக்கி பந்தை வீச முயன்றார். அப்போது சைபோர்டின் நிலையைப் பார்த்து இஸ்லாம் மனம் மாறி பந்தினை ஸ்டெம்பை நோக்கி வீசுவதை நிறுத்தினார்.

- Advertisement -

இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் தற்போது வைரலாகி வருகிறது.இதனைக் கண்ட பலரும் வங்காள தேச வீரர் இஸ்லாமை பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் ஆங்காங்கே அவ்வப்போது போட்டிகளில் நடைபெறும்.

சமீபகாலமாக வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடு சர்ச்சையாகி வரும் நிலையில் இஸ்லாமின் இந்த செயல்பாடு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களின் எண்ணத்தை சற்று மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது. தற்போது மழையால் நிறுத்தப்பட்ட ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிட்சல் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.