அப்பொழுது இந்திய அணிக்காக விளையாடி வரும் சப்ராஸ் கானை உடல் தகுதி காரணம் காட்டி முன்பு தேர்வு செய்யாதது குறித்து அப்போதைய தேர்வாளர்களை சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டுகளில் மிகச் சிறப்பாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் விளையாடிய போது, அவரது உடல் தகுதி மற்றும் களத்தில் ஒழுக்கம் போன்றவற்றை காரணமாக கூறி அவரை தேர்வு செய்யாமல் புறக்கணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் முதல் தர போட்டிகளில் 70 ஆவரேஜ் வைத்திருக்கிறார். மேலும் அவர் சதம் அடித்தால் அதை பெரிய சதமாக மாற்றக்கூடிய குணம் கொண்டவர். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி மூன்று அரைசதங்கள் மட்டும் எடுத்து சதத்தை தவறவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதத்தை தாண்டி சதம் அடித்ததோடு, 150 ரன்னையும் அடித்து அசத்தினார். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் மிகச் சிறப்பான நேரத்தில் கிடைத்தது. இந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சர்பராஸ் கான் குறித்து பேசி இருக்கும் கவாஸ்கர் கூறும் பொழுது “சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் சதங்களாக அடித்தாலும் சில ஆண்டுகள் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. காரணம் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தவர்கள் அவருக்கு இடுப்பு மெல்லியதாக இல்லை என்று நம்பினார்கள். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மெல்லிய இடுப்பை விட திறமைதான் முக்கியம் என சர்பராஸ்கான் நிரூபித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் புரிந்து கொள்ள முடியாத பல யோசனைகள் இருக்கிறது”
இதையும் படிங்க : இந்தியா ஜெயிக்கிறது சந்தேகம்தான்.. ஏன்னா ரோஹித் அணிகிட்ட முக்கியமா இந்த விஷயம் இல்லை – அஜய் ஜடேஜா கருத்து
” ரிஷப் பண்ட் இவர்கள் விரும்பும் மெல்லிய இடுப்பு இல்லாதவர்தான். ஆனால் அவர் நாள் முழுவதும் விக்கெட் கீப்பராக நிற்க முடியும். மேலும் களத்திற்கு வந்து ஒருநாள் முழுதும் பேட்டிங் செய்ய முடியும். உங்களுடைய யோ யோ டெஸ்ட் எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள். ஒருவரால் நாள் முழுவதும் களத்தில் இருக்க முடியுமா? இருவது ஓவர்கள் பந்து வீச முடியுமா? என்று பாருங்கள். இதை ஒருவரால் செய்ய முடிந்தால் அவர் இடுப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவர் பிட்டாக இருக்கிறார் என்று அர்த்தம்” எனக் கூறியிருக்கிறார்.