நல்ல வேல அவர் இல்ல.. கவாஸ்கர் மாஸ் பேச்சு.. ஆஸியை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்கள்

0
3449

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 139 ரன்களுக்கு ஏழு விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 262 ரன்கள் என்ற இலக்கிற்கு ஆஸ்திரேலிய அணியை கொண்டு வந்தார். அப்போது கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டு இருந்த கவாஸ்கர் ரிஷப் பண்டிற்கு உணர்ச்சிகரமான ஒரு மெசேஜ் வழங்கினார்.

- Advertisement -

அதில் ரிஷப் பன்ட் இந்த தொடரில் விளையாடாதது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யும்போது பேட்ஸ்மேன் கூட பேசுவதை விட தனது சக அணி வீரர்களுடன் பேசி கலகலப்பாக வைத்துக் கொள்வார். இந்த போட்டியை பண்ட் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். சீக்கிரம் வாருங்கள் என்று கவாஸ்கர் கூறினார்.

ரிஷப்பண்ட்  எப்போதும் அதிரகுறிப்பிட்டுள்ளார்.ிய வீரர். அவருக்கு பதிலாக களம் இறங்கிய கே எஸ் பரத் விக்கெட் கீப்பிங்கில் கலக்கி வந்தாலும் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து சொதப்பி வருகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் அக்சர், அஸ்வின், ஜடேஜா மூன்று வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவர்களுடன் ரிஷப் பந்தும்  இணைந்து அதிரடி காட்டி இருந்தால் ஆஸ்திரேலியா நிச்சயம் இந்தியாவை கட்டுப்படுத்த திணறி இருக்கும். கேஸ் பரதுக்கு பதில் ஆக மாற்று விக்கெட் கீப்பரை பயன்படுத்த இந்தியா யோசித்து வருகிறது. இஷான் கிஷன் அணியில் இருந்தாலும் இந்தியா அவரை அடுத்த போட்டியில் பயன்படுத்தி பார்க்கலாம். ரஞ்சி கிரிக்கெட்டில் ஏற்கனவே இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.

இதேபோன்று நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனும் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது முழு உடல் தகுதி  பெற்றுள்ளார். தற்போது ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்து வரும் சஞ்சு சாம்னுக்கு கூட எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திக் கொள்ள பி சி சி ஐ முடிவெடுக்கலாம் .ஆனால் கே எஸ் பரத் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி இன்று மிகவும் மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் 9 விக்கெட்டுகளை இழப்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது என அவர் கூறியுள்ளார். இதை கருத்தை தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஹைடன் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார்