“தோனி இந்தமுறை இதை நிச்சயம் செய்வாரு.. உள்ள வெளிய மாஸ் பண்ண போறாரு” – கவாஸ்கர் தகவல்

0
23
Dhoni

ஐபிஎல் 17வது சீசன் அடுத்த மாதம் இறுதியில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இருக்கின்றது. இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி மார்ச் மத்தியில் முடித்துக் கொள்ளும். மேற்கொண்டு வழக்கம்போல் மார்ச் இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கலாம்.

இந்த நிலையில் 17வது ஐபிஎல் சீசன்க்கான மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிவுக்கு வந்தது. இதில் மும்பை அணி மிகவும் வலிமையான அணியாக தற்பொழுது பேப்பரில் காட்சியளிக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் சென்னை அணி தங்களுடைய தேவையான இடங்களுக்கு மிகச் சரியான வீரர்களை வாங்கி இருக்கிறது. அவர்களிடம் இருந்த பணத்திற்கு தேவைப்பட்ட வீரர்கள் குறைவாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அவர்களது அணி முன்பே செட் செய்யப்பட்டு இருக்கிறது.

பொதுவாக தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்து பார்த்தால் பேட்டிங் வரிசையும் மிக நீளமாக இருக்கும் ; அதேபோல பந்துவீச்சு வரிசையும் மிக நீளமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கேப்டனுக்குநிறைய விருப்பங்கள் இருக்கிறது. இது மகேந்திர சிங் தோனியின் வேலையை கொஞ்சம் எளிதாக்கும் என்று கவாஸ்கர் நினைக்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகச்சிறந்த பந்துவீச்சு தாக்குதல் கிடைத்திருக்கிறது. மகேந்திர சிங் தோனிக்கு பந்துவீச்சில் நிறைய ஆப்ஷன்கள் இருக்கும். எனவே அவர்கள் பந்துவீச்சு குறித்து பெரிதும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் இந்த முறை ஐபிஎல் தொடரில் சென்னைக்கும் அதே சமயத்தில் வெளியில் விளையாடும் பொழுதும் மாற்றி மாற்றி பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவார் என்று தெரிகிறது.

- Advertisement -

சென்னையில் ஒரு மாதிரியும் அதே சமயத்தில் வெளி மைதானங்களில் விளையாடும் பொழுது ஒரு மாதிரியும் மகேந்திர சிங் தோனி தன்னுடைய பந்துவீச்சு படையை மாற்றிக் கொள்வார். இது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி செய்வதாக அமையும்.

தீபக் சகர் ஒவ்வொரு முறையும் தொடக்கத்திலேயே விக்கெட்களை பெறுகிறார். எனவே வழக்கம்போல் அவரை மூன்று ஓவர்கள் மகேந்திர சிங் தோனி வீச வைப்பார். அவருக்கு மூன்று ஓவர்கள் முதலில் கொடுத்து தேவைப்பட்டால் கடைசி ஓவருக்கு கொண்டு வருவார். இதுதான் தோனி திட்டமாக இருக்கும்.

இதையும் படிங்க : “3வது டெஸ்டில் இதை செய்யுங்க.. வித்தை காட்டறதை விட ஜெயிக்கிறது முக்கியம்” – இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வாகன் அறிவுரை

அவர்களிடம் தற்பொழுது முகேஷ் சௌத்ரி, பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிஸூர் ரஹ்மான் என நிறைய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் ரவீந்திர ஜடேஜா சிறப்பான முறையில் வருவார். இந்த முறை அவர் ரன்கள் தந்தாலும் கூட நிறைய விக்கெட்களும் எடுப்பார். மேலும் டேரில் மிட்சல் இடையில் ஏதாவது ஓவர்கள் வீசவும் வாய்ப்பு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.