“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. இதனாலதான் துருவ் ஜூரலை தோனினு சொன்னேன்” – கவாஸ்கர் தந்த விளக்கம்

0
127
Jurel

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதோடு மட்டும் இல்லாமல் சில முக்கியமான நல்ல அறிகுறிகள் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மூத்த பெரிய வீரர்கள் சிலர் இல்லாமல் இந்திய அணி இளம் வீரர்களை வைத்து வென்று இருக்கிறது.

- Advertisement -

இதிலிருந்து ஜெய்ஸ்வால், சுப்மன் கில், துருவ் ஜுரல் போன்ற வீரர்கள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நீண்ட காலம் விளையாடுவார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் போட்டியில் வெளிப்படுத்திய ஆட்ட விழிப்புணர்வு எல்லோரையும் கவர்வதாக அமைந்திருக்கிறது.

அவர் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி விளையாடும் தன்மையை கொண்டிருக்கிறார். மேலும் தேவைப்படும் நேரங்களில் ரன்கள் கொண்டு வருவதற்கான திறமையும் அவரிடம் இருக்கிறது. அவர் கவனம் சிதறாமல் நல்ல மன உறுதி கொண்டவராக தெரிகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவர், எதிர்காலத்தில் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவார் என்று இப்பொழுதே பலரும் கூறி வருகிறார்கள். இதில் சுனில் கவாஸ்கர் முதல்முறையாக அவரை அடுத்த மகேந்திர சிங் தோனி என்று கூறியிருந்தார்.

தற்பொழுது ஏன் அவ்வாறு கூறினேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள சுனில் கவாஸ்கர் “துருவ் ஜுரல் ஆட்டத்தை பற்றி சிந்திக்கும் விதம், சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று மதிப்பிடும் விதம், அதற்குத் தகுந்தாற்போல் பேட்டிங் செய்யக்கூடிய விதம், அவர் தோனி போலவே செயல்படுகிறார் என்கின்ற எண்ணத்தை எனக்கு கொடுக்கிறது.

அவர் மெதுவாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென நடுவில் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் உடனே அதற்கு அடுத்து ஒன்று இரண்டு என ரன்கள் எடுக்க ஆரம்பித்தார். விக்கெட் கீப்பிங்கிலும் கூட தூரமாக சென்ற பந்தை சரியாகப் பிடித்து பென் டக்கெட்டை ரன் அவுட் செய்தார். மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த பொழுது அற்புதமான கேட்ச் பிடித்தார்.

இதையும் படிங்க : 147 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. நாதன் லயன் யாரும் செய்யாத சாதனை.. முரளிதரன் வார்னேவும் இல்லை

தோனிக்கு வயதான பொழுது கூட ஆட்ட சூழ்நிலை பற்றிய அவருடைய புரிதல் அப்படியே இருந்தது. தோனி ஒருவர்தான். அவரைப் போல வேறு யாரும் வர முடியாது. ஆனால் இந்த இளம் வீரரால் சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். தோனி செய்துள்ள விஷயங்களில் ஒரு பகுதியை ஆவது இவர் செய்ய முடியும். அப்படி செய்தாலே அது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய விஷயமாக அமையும்” என்று கூறி இருக்கிறார்.