இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை வெளியிட்டது தவறு என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்திருப்பது தவறானது என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இதற்கு அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் மெல்போர்ன் மற்றும் சிட்னி மைதானத்தில் பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளாக நடைபெற இருக்கிறது. இதில் நான்காவது போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானம் எப்படி ஆனதாக இருக்கும் என்பது குறித்து யாருக்கும் பெரிதான தெளிவு கிடையாது.
அதே சமயத்தில் கடைசி போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் ஆஸ்திரேலியாவில் பொதுவாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகத்தை கொடுக்க கூடிய மைதானமாக இருந்திருக்கிறது. எனவே இந்திய அணிக்கு தரமான சுழல் பந்துவீச்சாளர்களின் தேவை ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்த தொடர் முடிவடைந்ததும் அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கலாம். தோனி ஆஸ்திரேலியா தொடரின் இடையில் ஓய்வெடுத்த சூழ்நிலை வித்தியாசமானது.தேர்வுக்குழு பல காரணங்களை முன்வைத்து ஒரு அணியை தேர்வு செய்கிறது”
“வீரர்களுக்கு ஏதேனும் காயங்கள் இருந்தால் ரிசர்வ் வீரர்களில் இருந்து எடுக்கலாம். மேலும் சிட்னி மைதானத்தில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஆதரவு இருக்கிறது. எனவே இந்தியா அங்கு இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் கூட விளையாடியிருக்கலாம். ஆனால் மெல்போர்ன் மைதானம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது”
இதையும் படிங்க : நீங்க எனக்கு சக வீரர் மட்டுமில்ல.. அஸ்வின் அண்ணா இதை உங்ககிட்ட இருந்து எடுத்துக்கிட்டு போறேன் – வாஷிங்டன் சுந்தர் கருத்து
“பொதுவாக நீங்கள் தொடரின் முடிவை பார்க்கவே விரும்புகிறீர்கள். இப்படி நடுவில் வெளியேறுவதை பார்க்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இது வழக்கமானது கிடையாது. ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் அஸ்வினை விட முந்தி இருக்கலாம். ஆனாலும் அஸ்வின் இந்திய அணிக்கு ஒரு பந்துவீச்சாளராகவும் அதே சமயத்தில் பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை கொடுத்த வீரர்” என்று கூறியிருக்கிறார்.