நீங்க எனக்கு சக வீரர் மட்டுமில்ல.. அஸ்வின் அண்ணா இதை உங்ககிட்ட இருந்து எடுத்துக்கிட்டு போறேன் – வாஷிங்டன் சுந்தர் கருத்து

0
1582

இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருடைய இடத்தில் விளையாடப் போகும் வாஷிங்டன் சுந்தர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென அறிவித்திருக்கிறார். மேலும் தொடரில் அணியுடன் தங்காமல் உடனடியாக நாடு திரும்பவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏற்கனவே சூசகமாக சொல்லி இருந்த அஸ்வின்

இது குறித்து முன்பு பேசி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய இடத்தில் விளையாடுவதற்கு காத்திருக்கும் இளம் வீரர்கள் தான் தொடர்ந்து விளையாடுவதற்கு திட்ட மாட்டார்களா என்பது குறித்து தான் மனைவி பேசியதை பற்றி வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் நியூசிலாந்து தொடரில் தோல்வி அடைந்ததில் இருந்து, அந்தத் தொடரில் வாசிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டதோடு சேர்த்து அஸ்வின் ஓய்வு பெறும் முடிவுக்கு மிக வேகமாக வந்திருக்கிறார் என்று தெரிகிறது. இனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினுடைய இடத்திற்கு முதலில் வாஷிங்டன் சுந்தர் பெயர்தான் பரிசீலிக்கப்படும் என்பது உறுதி.

- Advertisement -

சகவீரர் என்பதைவிட மேலானவர்

இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடைய ஓய்வு குறித்து எழுதி உள்ள பதிவில் தெரிவிக்கும் பொழுது “நீங்கள் என்னுடைய சக அணி வீரர் என்பதை தாண்டி மேலானவர் அண்ணா. நீங்கள் விளையாட்டின் உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும் உண்மையான சாம்பியன் ஆகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களுடன் மைதானம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி”

இதையும் படிங்க : அஸ்வின் என்னை உணர்ச்சி வசப்பட வச்சிட்டீங்க.. அந்த விஷயங்களுக்கு ரொம்ப நன்றி – விராட் கோலி வாழ்த்து

“சேப்பாக்கத்தில் நான் உங்களைப் பார்த்து வளர்த்தேன். மேலும் உங்களுக்கு எதிராகவும் உங்களுடனும் சேர்ந்து விளையாடி செலவிட்ட நேரம் என்னுடைய பாக்கியமாக நான் கருதுகிறேன். களத்திற்கு உள்ளே வெளியே என உங்களிடமிருந்து கற்றுக் கொண்டதை நான் எடுத்துக் கொண்டு செல்வேன். அடுத்து நீங்கள் செய்யவிருக்கும் காரியத்தில் வெற்றி பெறுவதற்கு நான் வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -