நாய்க்குட்டிக்கு ஓரியோ என்று பெயரிட்ட கவுதம் கம்பீர்; தோனியின் விளம்பரத்தை கேலி செய்தா? – வீடியோ இணைப்பு

0
164
MSD

இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவர் தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் இவர்தான். மேலும் இத்தோடு சேர்த்து சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றிய உலகில் ஒரே கேப்டன் மகேந்திரசிங் தோனி தான்!

கடந்த வாரத்தில் சமூக வலைத்தளத்தில் தோனி ஒரு மிகப்பெரிய அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு வெளியிடுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிப்பதாக இருக்கலாம் என்று பல ரசிகர்கள் பயந்தார்கள். இல்லை அரசியலில் ஈடுபட போகிறாரா என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தார்கள்!

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு தோன்றிய மகேந்திரசிங் தோனி காட்பரி நிறுவனத்தின் ஓரியோ என்ற பிஸ்கட்டை அறிமுகம் செய்தார். அதில் காட்பரி நிறுவனம் 2011ஆம் ஆண்டு ஒரு பிஸ்கட்டை அறிமுகப்படுத்தியது, அந்த ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்பொழுது பக்கத்தில் இரண்டு உலகக் கோப்பை கள் உள்ளது. இப்பொழுதும் காட்பரி நிறுவனம் புதிய ஓரியோ பிஸ்கெட்களை வெளியிட உள்ளது என்று விளம்பரம் செய்தார்.

மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற போகிறாரா இல்லை அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று பயந்து கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு இது ஒரு விதத்தில் நிம்மதியை அளித்தது என்றே கூறலாம். ஒருவழியாக பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக மட்டுமே அது அமைந்தது எந்தவித ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அது உருவாக்கவில்லை.

இந்த நிலையில் திங்கட்கிழமை 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த கௌதம் காம்பீர் தனது மகள்களுடனும் தான் வளர்த்த நாய்க்குட்டிகள் உடனும் விளையாடுவது போன்ற ஒரு அழகான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தான் வளர்க்கும் நாய்க்குட்டி ஒன்றை ஓரியோ என்று அழைக்கிறார்.

இதைப் பார்த்த ஒரு ட்விட்டர்வாசி இப்படி கௌதம் காம்பீர் அழைப்பது மகேந்திர சிங் தோனி ஓரியோ பிஸ்கெட்டை வெளியிட்டதால் தான் என்று கூறியிருக்கிறார். மேலும் அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.