இந்திய கிரிக்கெட்டின் முதல் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கவுதம் கம்பீர் மகேந்திர சிங் தோனிக்கு சிறந்த பிறந்தநாள் வாழ்த்தைக் கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என இரண்டு பெரிய வெற்றிகளை பெற்றது. 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் இந்திய அணி வென்றது. இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது.
இப்படி எல்லா வகையான கிரிக்கெட் வடிவத்திலும், மேலும் எல்லா வகையான ஐசிசி தொடர்களையும் வென்ற ஒரே கேப்டனாக உலக கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட போதிலும் கூட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தொடர்கிறார். மேலும் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீவு என டி20 லீக்குகளில் மிகப்பெரிய வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார்.
கேப்டன் பொறுப்பில் இவ்வளவு பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் மகேந்திர சிங் தோனிக்கு இந்த முறை கவுதம் கம்பீர் சிறந்த பிறந்தநாள் வாழ்த்தை கூறியிருக்கிறார். வழக்கமாக கவுதம் கம்பீர் மகேந்திர சிங் தோனிக்கான தனிநபர் வழிபாட்டை எதிர்க்கக் கூடியவர் என்கின்ற காரணத்தினால், அவருடைய இந்த வாழ்த்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
மகேந்திர சிங் தோனிக்கு கவுதம் கம்பீர் கூறிய பிறந்தநாள் வாழ்த்தில் “இந்திய அணிக்கு நிறைய கேப்டன்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் இந்திய அணிக்காக கேப்டன் தோனி செய்திருக்கும் சாதனைகளை சமம் செய்வது மிகவும் கடினம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முதலிடத்திற்கு கொண்டு வரலாம், வெளிநாட்டுப் போட்டிகளில் வெல்லலாம். ஆனால் இரண்டு உலகக் கோப்பை மற்றும் ஒரு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கேப்டனாக வெல்வது பெரிய சாதனை.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இந்த 5 பசங்கதான்.. விராட்டுக்கும் மாற்று ஆளிருக்கு – ஆன்டி பிளவர் பேட்டி
நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மிகப்பெரிய தருணங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியான தருணங்களில் நானும் அவருடன் இருந்திருக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவில் சிபி தொடரை வென்றது, நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது, தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது,ஆசியக்கோப்பையை வென்றது என நிறைய இருக்கிறது. இதில் ஒன்றை மட்டும் குறிப்பிட முடியாது. இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாக தோனி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.