இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இந்த 5 பசங்கதான்.. விராட்டுக்கும் மாற்று ஆளிருக்கு – ஆன்டி பிளவர் பேட்டி

0
195
Virat

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி, மேலும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றார்கள். அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக ஐந்து இளம் வீரர்கள் இருக்கிறார்கள் என ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒரே நேரத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகியது, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கலாம் என சிலர் அச்சப்பட்டு வருகிறார்கள். அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டில் நிறைய திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மிகக் குறைந்த ரன்னை துரத்த முடியாமல் தோல்வியடைந்தது. இப்படியான நிலையில் இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலத்தை பற்றி பயப்படத் தேவையில்லை என ஆன்டி பிளவர் பேசியிருக்கிறார். மேலும் அவர் ஐந்து இந்திய இளம் வீரர்களை எதிர்காலமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இதுகுறித்து ஆன்டி பிளவர் பேசும் பொழுது ” நான் ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளரான பிறகு எல்லா வீரர்களையும் கவனிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. இந்த வகையில் நான் கவனித்ததில் 5 இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். ஜெய்ஸ்வால் டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் அவர் அருமையான வீரர். சுப்மன் கில்லுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையவில்லை என்றாலும், அவர் புத்திசாலித்தனமாக தெரிகிறார், விராட் கோலி போலவே விளையாடுகிறார்.

- Advertisement -

இதேபோல் நான் அபிஷேக் ஷர்மா எப்படி செல்கிறார்? என்று பார்க்க விரும்புகிறேன். துருவ் ஜுரல் எனக்கு மிகவும் பிடித்தவர். அவரை நான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பார்த்தேன். அதில் மிகவும் சிறப்பாக விளையாடினார்.மேலும் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கான ஸ்வாகர் ரியான் பராக்கிடம் இருக்கிறது. எனவே இந்த ஐந்து வீரர்கள் இந்திய எதிர்கால வீரர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க : சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா.. பிளேயிங் லெவனில் கில் என்ன மாதிரி முடிவெடுப்பார்?.. முழு அலசல்

தற்போது இந்திய அணியில் ஓய்வு பெற்ற வீரர்கள் மிகவும் தரமான வீரர்கள். ஆனால் அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டில் இப்படியான வீரர்கள் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கான ரெடிமேடான வீரர்கள் இருப்பார்கள். இந்தியாவின் கிரிக்கெட் உள் கட்டமைப்பு மிகவும் பலமானது. இந்தியா தொடர்ந்து ஜாம்பவான் வீரர்களை உருவாக்கி வரும். ஒவ்வொரு முறை பெரிய வீரர்கள் வெளியே செல்லும் பொழுது புதிய வீரர்கள் வந்து அந்த இடத்தை நிரப்புவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -