நாடுதான் முக்கியம்.. விராட் கோலி பேச்சுக்கு எதிராக கம்பீர் பேச்சு.. மீண்டும் பரபரப்பான இந்திய கிரிக்கெட்

0
148
Gambhir

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு கொண்டுவந்த விதிகள் குறித்து விராட் கோலி ஆரம்பத்திலேயே தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் விராட் கோலியின் கருத்துக்கு எதிரான கருத்தை முன் வைத்திருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். மேலும் கம்பீர் மூத்த வீரர்களை வெளியில் தள்ளி இளம் அணியை உருவாக்க விரும்புவதாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

விராட் கோலியின் எதிர்ப்பு

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்குவதற்கு புதிய விதிகளை கொண்டு வந்தது. 45 நாட்களுக்கு மேற்பட்ட தொடர் என்றால் 14 நாட்கள் தங்கலாம், அதுவே குறுகிய தொடர் என்றால் ஒரு வாரம் மட்டுமே தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தனி அறையில் சுவற்றைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது எனவும் குடும்பத்தினர் உடன் இருப்பது மிகவும் அவசியம் எனவும் விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரிய புதிய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் இதிலிருந்து இந்திய கிரிக்கெட் பாரியும் பின்வாங்கவில்லை. இப்படியான நிலையில்தான் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

- Advertisement -

கம்பீர் தந்த ஆதரவு

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “குடும்பம் எப்பொழுதும் முக்கியம்தான். ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு ஒரு நோக்கத்திற்காக இருக்கிறீர்கள். இந்த அணியிலோ அல்லது டிரெஸ்ஸிங் ரூமிலோ நாட்டை பெருமைப்படுத்தும் வாய்ப்பை பெறக்கூடியவர்கள் மிகவும் குறைவு. எனவே எங்களுடன் குடும்பத்தினர் இல்லாததை நான் எதிர்க்கவில்லை”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் காயம் இதுதான்.. இன்று அவர் ஆடுவாரா?.. நாசர் ஹுசைன் வெளியிட்ட முக்கிய தகவல்

“குடும்பங்கள் உடன் இருப்பது முக்கியம் என்றால், நீங்கள் இந்திய அணிக்காக விளையாடுவது மற்றும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எவ்வளவு பெருமையானது என்பது குறித்து புரிந்து உறுதியாக இருந்தால் இது பெரிய விஷயம் கிடையாது. நாட்டிற்காக விளையாடும் நோக்கத்தை விட எனக்கு பெரிய விஷயம் வேறு எதுவும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -