இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் இன்று களம் திரும்புவாரா? என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் கைவிரலில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து துருவ் ஜுரல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணிக்கு இழப்பு
தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக விளையாடி இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று முதல் நாளிலேயே காயத்தின் காரணமாக வெளியேறி மீண்டும் திரும்ப வராதது கவலை தருகிறது.
இதன் காரணமாக அவர் மீண்டும் வருவாரா என்பது குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உடனடியாக ரிஷப் பண்ட் உடன் சென்று அவரது காயம் குறித்து பார்வையிட்டு வந்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்திய தரப்பிலிருந்து ரிஷப் பண்ட் குறித்து எந்த தகவலும் வரவில்லை.
நாசர் ஹுசைன் வெளியிட்ட தகவல்
இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இது குறித்து வெளிப்படையாக கூறும்பொழுது ரிஷப் பண்டுக்கு ஆள்காட்டி கை விரலில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், இது எலும்பு முறிவை உண்டாக்கவில்லை என்றும், அதே சமயத்தில் நகத்தை உடைத்ததால் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு ஓய்வறையில் ஐஸ் வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய தொடரை விட்டு விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?.. வெளியான முக்கிய செய்தி.. கவலையில் இங்கிலாந்து ரசிகர்கள்
தற்போது இவரது கருத்தையே இந்திய கிரிக்கெட் வாரியமும் வெளியிட்டிருக்கிறது. எனவே ரிஷப் பண்ட் கண்டிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் விக்கெட் கீப்பிங் செய்யாவிட்டாலும் கூட பேட்டிங் செய்ய அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பது இந்திய ரசிகர்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறது.






