உண்மைய சொல்லிடறேன்.. இந்திய அணிக்கு பயிற்சியாளராவதை விட பெரிய கௌரவம் இல்லை – கம்பீர் பேச்சு

0
237
Gambhir

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு வருகிறாரா? என்பது குறித்து அவரே இன்று பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த மாதத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேடுவதாக அறிவித்தது. மேலும் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் கூறியிருந்தது. விண்ணப்பங்கள் வெளிப்படையான முறையில் கிடைத்தது.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோரது பெயர்கள் யூகமாக சுற்றி வந்தன.

இந்த நிலையில் திடீரென கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக இருக்கும் கவுதம் கம்பீர் பெயர் பரவலாக எல்லோராலும் கூறப்பட்டது. அவர் இது குறித்து மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இது சம்பந்தமாக தொடர்ந்து அவர் பெயரை வைத்து பல செய்திகள் வந்து கொண்டு இருந்தது.

இப்படியான சூழ்நிலையில் இந்திய அணிக்கான தலைமை கம்பீர் தற்பொழுது துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று கூறலாம். அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல்-லால் 9 வீரர்களை வச்சி விளையாடினோம்.. நான் இத பத்தி மட்டும் பேசவே விரும்பல – மிட்சல் மார்ஸ் பேட்டி

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “தொடர்ந்து இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டு வந்தது ஆனால் நான் இதற்கு பதில் சொல்லாமல் இருந்து வந்தேன் தற்பொழுது உங்களுக்கு பதில் சொல்லலாம் என்று விருப்பப்படுகிறேன். நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். தேசிய தேசிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விட கௌரவமானது வேறு இல்லை. நீங்கள் 140 கோடி இந்தியர்களை உலகம் முழுவதிலும் பிரதிநிதித்துவப்படுத்துவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.