இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி நடத்தும் ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடர் துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு இருந்த இரண்டு பயிற்சி போட்டிகளையும் அந்த அணி 9 வீரர்களுடன் மட்டுமே விளையாடியது. இதற்கு ஐபிஎல் காரணமாக இருந்தது பற்றிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் பேசியிருக்கிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மிட்சல் மார்ஸ் கொண்டுவரப்பட்டிருக்கிறார். டீம் காம்பினேஷனை சூழ்நிலைக்கு தகுந்தவாறு அமைப்பதற்காக பாட்ட் கம்மின்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டு பயிற்சி போட்டிகளை விளையாடியது. இரண்டு போட்டிகளிலுமே அவர்களுக்கு ஒன்பது வீரர்கள் மட்டுமே கிடைத்தார்கள். டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் ஓய்வு கிடைக்காத காரணத்தினால் ஆஸ்திரேலியா அணியுடன் இணையவில்லை.
இதன் காரணமாக இரண்டு பயிற்சி போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் அணியின் பயிற்சியாளர்கள் வரை பீல்டிங்கில் ஈடுபட்டார்கள். மேலும் ஒரு பின்னடைவாக ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது இது குறித்து பேசி இருக்கும் மிட்சல் மார்ஸ் கூறும் பொழுது “ஐபிஎல் தொடருக்கும் டி20 உலக கோப்பை தொடர்க்கும் இடையில் சரியான இடைவெளி தேவையா? என்கின்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஏனென்றால் இந்த முடிவுகளை நான் எடுக்கவில்லை. நாங்கள் ஒரு அணியாக இங்கு வெற்றி பெற வந்திருக்கிறோம். ஆரம்பத்தில் விஷயங்கள் கொஞ்சம் முரண்பாடாக தோன்றினாலும் கூட, இங்கு பெரும்பாலான அணியின் வீரர்கள் ஐபிஎல் தொடர் விளையாடிதான் வருகிறார்கள்.
இதையும் படிங்க : போன முறை இந்திய அணியை விட்டுட்டோம்.. ஆனா இப்ப இந்த விஷயத்துல பதட்டமா இருக்கு – பாபர் அசாம் பேட்டி
தற்போது இதுதான் கிரிக்கெட்டின் இயல்பாக இருந்து வருகிறது. நாங்களும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுப்பயணத்திற்கு வருகிறோம். அடுத்த சில நாட்களில் நாங்கள் ஒன்றிணைந்து விளையாட ஆரம்பிப்போம்” என்று கூறியிருக்கிறார்.