இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்து பயிற்சியாளர் பொறுப்புகளில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக கொடுத்த ஒரு பேட்டி தற்பொழுது மிகவும் வைரலாகி கொண்டு வருகிறது.
கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வந்ததும் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் குழுவில் இருந்த ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பை மட்டுமே தக்க வைத்துக் கொண்டார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பழைய பயிற்சியாளர்கள் விலகிக் கொண்டார்கள்.
மேலும் கம்பீர் தன்னுடைய பயிற்சியாளர் குழுவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்த அபிஷேக் நாயர் மற்றும் நெதர்லாந்தின் டென் டோஸ்கேட் ஆகியோரை சேர்த்துக் கொண்டார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக தான் சேர்ந்து விளையாடி பணியாற்றிய தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கலை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் கொண்டு வந்திருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர் அணியின் கேப்டனாக கம்பீர இருந்த பொழுது மோர்னே மோர்கல் அந்த அணியில் விளையாடினார். மேலும் கம்பீர் டெல்லி அணிக்கு சென்ற பிறகும் அவரை அணிக்கு கொண்டு வந்தார். இது மட்டும் இல்லாமல் லக்னோ அணிக்கு கம்பீர் மென்டராக இருந்த பொழுது மோர்னே மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் கொண்டுவரப்பட்டார். இப்படி இவர்கள் பலகாலம் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசி இருந்த கம்பீர் கூறும் பொழுது ” நான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் தென் ஆப்ரிக்காவின் மோர்னே மோர்கல் மிகவும் கடினமானவர். எனவே தான் நான் கேப்டனாக இருந்த பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொண்டு வந்தேன். மேலும் நான் டெல்லி அணிக்கு திரும்பி வந்த பொழுதும் அவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். அவருடைய பவுன்ஸ் விளையாட முடியாதது” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : பாபர் அசாம் இல்லை.. பாகிஸ்தான் அணியில் இந்த 3 பேருக்குத்தான் உடல் தகுதி இருக்கிறது – சல்மான் பட் விமர்சனம்
இதன் காரணமாகத்தான் தொடர்ச்சியாக கம்பீர் மோர்னே மோர்கலை ஆதரித்து வந்திருக்கிறார் என்று தெரிகிறது. அவருடைய இந்த ஆதரவு ஐபிஎல் தொடரோடு நிற்காமல் இந்திய அணிக்கும் பந்து வீச்சு பயிற்சியாளராக மோரனே மோர்கலை அழைத்து வந்திருப்பது தெரிகிறது. தற்பொழுது கம்பீரின் இந்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.






