நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மென்டராக இருக்கும் கொல்கத்தா அணி 20 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இன்று அந்த அணி முதல் தகுதிச்சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் கவுதம் கம்பீர் தன்னுடைய பழைய வாழ்க்கை சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய நபராக கம்பீர் தொடர்பு இருந்து வந்திருக்கிறார். அவரிடம் வரக்கூடிய பேச்சுகள் எப்பொழுதும் தனிநபரை முன்னிறுத்தாமல், அணியை முன்னிறுத்த வேண்டும் என்பதும், அதே சமயத்தில் அணிக்காக உழைத்த எல்லா வீரர்களுக்குமான பெருமைகள் சேர வேண்டும் என்றும் இருக்கும்.
இதன் காரணமாக கம்பீருக்கு பெரிய அளவில் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலும் முக்கியமான தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியிருக்கிறார். மேலும் கேப்டனாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு இரண்டு கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறார். தற்பொழுது பயிற்சியாளராகவும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கவுதம் கம்பீர் பேசும் பொழுது “நான் 12 இல்லை 13 வயதில் இருந்த பொழுது, 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஏனென்றால் நான் தேர்வாளர்களின் காலைத் தொட்டு வணங்கவில்லை. அங்கிருந்து யாருடைய கால்களையும் தொட மாட்டேன் என்று முடிவு செய்து கொண்டேன். மேலும் என் கால்களையும் யாரையும் தொடவிடக்கூடாது எனவும் தீர்மானித்தேன்.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 16 வயதிற்கு உட்பட்ட அணியில் ஆரம்பித்து சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்பம் வரையில் நான் தோல்விகளை சந்திக்கும் பொழுது, நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே திரும்பச் சென்று என் தந்தையின் தொழிலை செய்ய வேண்டும் என்று மக்கள் பேசினார்கள். இது எப்போதும் என்னை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதையும் படிங்க : நான் தோத்துட்டு போனாலும்.. என்ன ஒரே மாதிரி வரவேற்கக் கூடியது இது மட்டும்தான் – தோனி பேட்டி
ஆனால் நான் மக்களின் இந்த எண்ணத்தை உடைக்க பெரிதும் விரும்பினேன். ஆனால் இதை மக்கள் உணரவில்லை. எனவே மக்களின் அந்தக் கருத்தை முறியடித்த பிறகு, என்னை தொந்தரவு செய்த விஷயமாக வேறு எதுவுமே இல்லை. ஏனென்றால் என் வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒரு விஷயமாக மக்களிடம் அப்படியான கருத்துக்கள தான் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.