பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் ஆறு மாதத்தில் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராக சென்று அவரால் நீடிக்க முடியவில்லை.
கேரி கிரிஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அணியின் அடிமட்டத்தில் இருந்து சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதித்திருந்தது. ஆனால் வீரர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
மேலும் ஷாகின் அப்ரிடி பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் சொன்ன சில விஷயங்களை மதிக்காமல் எதிர்த்து பேசி நடந்ததாக கூறப்படுகிறது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் எடுத்துச் செல்ல விவகாரம் பெரிதானது. பிறகு ஷாகின் அப்ரிடி நீக்கப்பட்டதும் நடந்தது.
வெள்ளைப் பந்து அணிகளுக்கு திறன் வளர்க்கும் பயிற்சியாளர் பொறுப்பிற்கு கேரி கிரிஸ்டன் பரிந்துரைத்த பயிற்சியாளரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்க சம்மதிக்கவில்லை. இது அவரை அதிகம் வெறுப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து எதிர்பார்த்ததை விட வேகமாக விலகிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: வேணும்னா பாருங்க.. வாஷிங்டன் சுந்தரால் இந்திய அணியில் மிகப்பெரிய விரிசல் வரும்.. என்ன பண்ண போறீங்களோ – மனோஜ் திவாரி பேட்டி
கேரி கிரிஸ்டன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சற்று முன் உறுதி செய்திருக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி தற்காலிகமாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.