ஜிம்பாப்வே அணிக்கு மாறும் பிரபல இங்கிலாந்து வீரர் – ஐசிசி இடம் கோரிக்கை!

0
11599
Gary ballance

இங்கிலாந்து அணிக்காக 2013ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை விளையாடியவர் கேரி சிமன் பேலன்ஸ். தற்போது 32 வயதாகும் இவர் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக 2013ஆம் ஆண்டு அறிமுகம் ஆனால். அடுத்து 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அறிமுகம் ஆனார்!

கேரி பேலன்ஸ் இங்கிலாந்து அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளில் நான்கு சதம் மற்றும் ஏழு அரைசதங்களோடு 37.45 ரன் சராசரியில் 1498 ரன்களை எடுத்துள்ளார். 19 ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரைசதங்களோடு 21.21 ரன் சராசரியில் 297 ரன்கள் எடுத்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு இலங்கையோடு நடந்த ஒருநாள் போட்டி இவரது கடைசி ஒருநாள் போட்டியாகவும், 2017ஆம் ஆண்டு செளத்ஆப்பிரிக்கா அணியோடு நடந்த டெஸ்ட் போட்டி கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது!

- Advertisement -

கேரி பேலன்ஸ்க்கு இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காமல் போனாலும், அவர் தொடர்ந்து இங்கிலாந்தின் கவுன்டி அணிகளான டெர்பிசைர், யார்க்சைர் அணிகளுக்காக விளையாடி வந்தார்!

தற்பொழுது ஐசிசி இடம் இங்கிலாந்தில் இருந்து ஜிம்பாப்வே அணிக்காக விளையாட அனுமதி கேட்டிருக்கிறார். காரணம், இவர் ஜிம்பாப்வே நாட்டின் ஹராரே நகரில் பிறந்து வளர்ந்தவர். மேலும் ஜிம்பாப்வே அணிக்காக 19 வயதுக்குட்டபவர்களுக்கான ஐந்து போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

மேலும் இவர் இணைந்திருந்த இங்கிலாந்தின் கவுன்டி அணியான யார்க்சைர் அணியில் எழுந்த இனவெறி குற்றச்சாட்டில் சிக்கி இருந்தார். பின்பு இவர் தரப்பிலிருந்து ஒரு விளக்கமும் மன்னிப்பும் கேட்கப்பட்டு இருந்தது!

- Advertisement -

இந்த நிலையில் இவர் இங்கிலாந்து அணியிலிருந்து ஜிம்பாப்வே அணிக்கு விளையாட ஐசிசியை அணுகி இருக்கிறார். ஐசிசி விதிப்படி ஒரு வீரர் ஒரு தேசிய அணியிலிருந்து இன்னொரு தேசிய அணிக்கு மாறி விளையாட, நடுவில் மூன்று ஆண்டுகள் அந்த வீரர் ஒரு தேசிய அணிக்கு விளையாடி இருக்கக் கூடாது. கேரி பேலன்ஸ் கடைசியாக விளையாடியது 2017ஆம் ஆண்டில்தான் என்பதால், அவருக்கு ஜிம்பாப்வே அணியில் விளையாட அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது!