“தம்பி சர்பராஸ் கான் நீ நல்ல உதாரணம்.. ஆனா இதையும் செய்யனும்” – கங்குலி கோரிக்கை

0
269
Ganguly

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் முகமது சமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் சந்தித்து மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெறவில்லை. மூன்றாவது போட்டியின் நடுவில் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்ப சூழ்நிலை காரணமாக வீடு திரும்ப வேண்டி இருந்தது.

- Advertisement -

ஆனால் இத்தனை நெருக்கடியான பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு, இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதிர்கால இந்திய கிரிக்கெட் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

குறிப்பாக இந்த தொடரில் இளம் வீரர்கள் ஜெயஸ்வால், கில், சர்பராஸ் கான், துருவ் ஜுரல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இத ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் மிகவும் கவனம் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.

ஜெய்ஸ்வால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறார். சர்பராஸ் கான் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இரண்டு அரை சதங்கள் எடுத்திருக்கிறார். இதனால் பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள்.

- Advertisement -

சௌரவ் கங்குலி இந்த இரண்டு வீரர்கள் பற்றி கூறும்பொழுது “ஜெய்ஸ்வால் ஒரு சிறந்த வீரர் மட்டும் கிடையாது. அவர் எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கான திறமைகளை பெற்ற வீரராக இருக்கிறார்.

சர்பராஸ் கான் மிக நன்றாகத் துவங்கியிருக்கிறார். தற்போது அவர் வெளிநாடுகளிலும் போர் அடிக்க வேண்டும். தன்னை இந்திய அணியில் நிலைநிறுத்திக் கொள்ள இது அவசியம். இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் அடித்து போராடி இந்திய அணிக்குள் வர முடியும் என்பதற்கு இளம் வீரர்களுக்கு சர்ப்ராஸ் கான் உதாரணமாக இருக்கிறார்.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால் சேவாக் மட்டுமல்ல.. இவர் மாதிரியும்தான்” – பாகிஸ்தான் டேனிஸ் கனேரியா பேச்சு

இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறை நன்றாக இருந்தாலும் கூட இந்திய சூழ்நிலைகள் அது வெற்றி பெறுவது கடினம். இங்கு அவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் ஆச்சரியமடைவேன். இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இல்லாத போது கூட, இந்திய இளம் அணியிடம் இங்கிலாந்து திணறி வருகிறது” என்று கூறி இருக்கிறார்.