இந்திய கிரிக்கெட்

நான் ஏற்கனவே கம்பீர் பற்றி சொல்லி இருக்கேன்.. இந்த விஷயத்துல இன்னும் மேம்படனும் – கங்குலி பேச்சு

தற்போது இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான பயிற்சியாளராக மாறி இருக்கும் கம்பீர் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் இரண்டு முறை ஐசிசி தொடர்களை வென்ற ஒரே பயிற்சியாளராக கம்பீர் மாறியிருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களை கைப்பற்றியுள்ளது.

கொஞ்சம் மேம்பட வேண்டும்

இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீருக்கு நாம் இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து ஆதரவாக கங்குலி பேசி வந்தார். கம்பீருக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் மோசமான டெஸ்ட் தோல்விகள் பயிற்சியாளராக ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “கம்பீர் மிகவும் நல்ல பயிற்சியாளர். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என நான் சொல்லி இருந்தேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் நல்ல பயிற்சியாளர். மேலும் அவரிடம் நல்ல அணி உள்ளது. ஆனால் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவரர் இன்னும் கொஞ்சம் மேம்பட வேண்டும்”

- Advertisement -

இதைச் செய்ய வேண்டும்

“இந்தியாவில் டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற வேண்டும் என்றால் நல்ல ஆடுகளங்கள் தயாரிக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கிலாந்து தொடரை எடுத்துக் கொண்டால் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. எனவே ஆடுகளம் குறித்து கம்பீர் அதிகம் யோசிக்க தேவையில்லை. உங்களுக்கு நல்ல ஆடுகளம் கிடைத்தால் நல்ல முடிவுகளும் வரும்”

இதையும் படிங்க : சிஎஸ்கேல ருதுராஜிக்கு இது கஷ்டம்.. ஆனா சஞ்சு சாம்சன் செய்யப் போற உதவி முக்கியம் – இர்பான் பதான் கருத்து

“மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவில் 2027 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவருக்கு பெரிய சவால்கள் காத்திருக்கும். அந்த சூழ்நிலை அவரை கடுமையாக சோதிக்கும். ஆனால் அவரிடம் இருக்கும் சரியான அணியை கொண்டு அவர் அதை சமாளிப்பார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts