சிஎஸ்கேல ருதுராஜிக்கு இது கஷ்டம்.. ஆனா சஞ்சு சாம்சன் செய்யப் போற உதவி முக்கியம் – இர்பான் பதான் கருத்து

0
4
Irfan

இந்த ஆண்டு 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு விஷயங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் தற்பொழுது சிஎஸ்கே அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்து இருப்பது சில சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. அவர் புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

- Advertisement -

இது கடினமானது

அதே சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் இருந்து பறிக்காது என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். சிஎஸ்கே அணி நிர்வாகம் நம்பிக்கையை கொடுக்கும் மாறாக நம்பிக்கையை அளிக்காது என்று தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “தற்போது சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவதால் ருதுராஜ் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர் ஒரு கேப்டனாக வளர்ந்து வருவதையும் பார்த்துள்ளோம். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே போல ஒரு அணியை வழிநடத்துவது சாதாரணமில்லை. எம்எஸ்.தோனி உருவாக்கிய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினமானது”

- Advertisement -

சாம்சன் உதவி செய்வார்

“அதே சமயத்தில் தோனியின் ஆதரவும் சஞ்சு கொண்டு வரும் உதவியும் ருதுராஜுக்கு எப்பொழுதும் பலனளிக்கும். ஒரு மொத்த அணியும் எப்படி அமைகிறது என்று பார்ப்பது வேறு விஷயம். அதே சமயத்தில் பிளேயிங் லெவனில் காம்பினேஷன்கள் எப்படி அமைகிறது என்று பார்ப்பது வேறு விஷயம்”

இதையும் படிங்க : வைபவ் சூரியவன்சி கிட்ட புதுமை போயிடுச்சு.. இந்த ஐபிஎல் பையனுக்கு வேற மாதிரி இருக்கும் – ராபின் உத்தப்பா எச்சரிக்கை

“சிஎஸ்கே எப்பொழுதும் அனுபவ வீரர்களை நம்பி அமைக்கப்பட்டு வந்தது. தற்போது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு இளம் வீரர்கள் பக்கமாக சென்றுள்ளது. அவர்கள் எதிர்காலத்திற்கான அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே சிஎஸ்கே அணியில் உள்ள சில குறிப்பிட்ட இளம் வீரர்கள் இந்த சீசனில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக உள்ளேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -