“கங்குலி தோனிக்கு பண்ணத, நீங்க ஏன் சஞ்சு சாம்சனுக்கு பண்ணல?” – முன்னாள் இந்திய செலெக்டர் விளாசல்!

0
1202

இந்திய அணி தனது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தோல்வியுடன் முடித்திருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு தொடரை இழந்து இருக்கிறது.

உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை பரிசோதிப்பதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் இழந்திருக்கிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது .

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் டி20 தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 5 போட்டிகளிலும் ஆடிய அவர் 32 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். இந்த தொடரில் அவரது சராசரி 10. இந்த சுற்றுப்பயணத்தின் போது இரண்டு ஒரு நாள் போட்டிகளில் ஆடிய அவர் 60 ரன்கள் எடுத்திருந்தார் அதில் ஒரு அரை சதமும் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர் டி20 போட்டியிலும் மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் கோட்டை விட்டு இருக்கிறார் சஞ்சு சாம்சன். இதனால் அவர் இந்திய அணியில் இருந்து மீண்டும் வெளியேற்றப்படலாம் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரிம் சஞ்சு சாம்சன் தன்னுடைய உளவு திறமையும் வெளிக்கொண்டு விளையாடுவதற்கு இந்திய நிர்வாகம் சௌரவ் கங்குலி செய்ததை தற்போது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்த ஒரு ரசிகர் மகேந்திர சிங் தோனியை போலவே சஞ்சு சாம்சனுக்கு ஒரு இன்னிங்ஸ் தேவைப்படுகிறது. தனது முதல் நான்கு போட்டிகளில் சுமாராக விளையாடிய தோனி பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது ஐந்தாவது இன்னிங்ஸில் மூன்றாவது வீரராக களம் இறங்கி 148 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு தோனி இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரராக ஆனதோடு இந்தியா அணிக்காக இரண்டு உலக கோப்பைகளையும் வாங்கி கொடுத்திருக்கிறார் . சஞ்சு சாம்சனுக்கும் அது போன்ற ஒரு இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்வை மாற்றும் என பதிவிட்டு இருந்தார் .

இந்தப் பதிவிற்கு பதிலளித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சபா கரிம்” நிச்சயமாக ஒரு வீரருக்கு அதுபோன்ற ஆட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். தங்களுடைய கருத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் சவுரவ் கங்குலி மகேந்திர சிங் டோனியை மூன்றாவது இடத்தில் ஆட வைத்தது போல் சஞ்சு சாம்சனை அணி நிர்வாகம் டாப் ஆர்டரில் ஆட வைக்க வேண்டும்” இன்று பதிலளித்திருக்கிறார். இதேபோன்று ஒரு வீரர் டாப்பர்ரில் ஆடும் போது தான் அவரது முழு திறமையும் தெரியவரும் என கௌரவ கங்குலியும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்தியா அயர்லாந்து நாட்டிற்கு மூன்று டி20 களை கொண்ட போட்டி தொடரில் விளையாட செல்கிறது. இந்த அணியிலும் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருக்கிறார். அயர்லாந்து தொடரில் அவர் தனது ஃபார்முக்கு திரும்புவாரா என்று பார்ப்போம்.