பாபர் அசாம் இந்திய ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக் எதிர்த்து ரன் அடிக்கட்டும் பார்க்கலாம் – கங்குலி சூசகமான சவால்!

0
582
Babar

இந்த ஆண்டில் குறைந்தபட்சம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேராக மூன்று போட்டிகளில் மோதிக் கொள்வதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது!

இதன் காரணமாக கிரிக்கெட் உலகில் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிகள் குறித்தான கருத்துகளும் விவாதங்களும் மிகப் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பெருகி வருகின்றன!

- Advertisement -

இரு நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் முன்வைத்து வருகிறார்கள். சில நேரங்களில் சிலர் கருத்துக்கள் சூடான ஒன்றாகவும் மாறிவிடுகிறது.

தற்பொழுது நடைபெற்று வரும் 16ஆவது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை இலங்கை கண்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி ஆசியக் கோப்பையின் மிக முக்கியமான போட்டி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

நாளை நடைபெற இருக்கும் இந்தப் போட்டி குறித்து மிகப்பெரிய அளவில் கருத்துகளும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் ரசிகர்களுக்கு இந்த போட்டி குறித்தான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தனது கருத்துக்களை முன்வைத்து பேசி இருக்கிறார். குறிப்பாக இரண்டு அணிகளின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பற்றி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறும் பொழுது “பாபர் ஒரு நல்ல வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அவரைக் குறிவைத்து ஆசியக் கோப்பை உலக கோப்பையில் பந்த வீச வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை அவருக்கு எதிராக திட்டங்கள் இருக்கும். எங்களிடம் பும்ரா, சமி, சிராஜ் என நல்ல வேகப்பந்துவீச்சு தாக்குதல் இருக்கிறது.

பாபர் எங்கள் வேகப்பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக ரன்கள் எடுக்க நன்றாக விளையாட வேண்டும். அவர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்கிறார். இது அவருக்கும் தெரியும். மேலும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பாபருக்கு சிறப்பாக பந்து வீசவேண்டும்.

பாகிஸ்தானுக்கும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதல் இருக்கிறது. எனவே அப்படியான வேகப் பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக இந்தியாவும் சிறந்த முறையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்!