இந்திய கிரிக்கெட்

தாங்க முடியலப்பா.. இன்றும் கம்பீர் செய்த காரியம்.. நொந்து போன இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் – என்ன நடந்தது?

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய பயிற்சியாளர் கம்பீர் செய்த ஒரு காரியம் மீண்டும் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

- Advertisement -

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று ஒரு போட்டி மழையால் ரத்து ஆகி இருந்தது. இதைத்தொடர்ந்து என்று நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லேண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மைதானத்தால் வந்த பிரச்சனை

இன்று போட்டி நடைபெறும் மைதானம் மிகவும் பெரியதாக இருக்கிறது. அதே சமயத்தில் பந்து பேட்டுக்கு வருவதில் கொஞ்சம் நின்று வருகிறது. இதன் காரணத்தால் இந்திய பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் அதிரடியில் ஈடுபட முடியாமல் திணறி வருகிறார்கள்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 21 பந்தில் 28 ரன், கில் 39 பந்தில் 46 ரன், சிவம் துபே 18 பந்தில் 22 ரன், கேப்டன் சூரியகுமார் யாதவ் 10 பந்தில் 20 ரன், அக்சர் படேல் ஆட்டம் இழக்காமல் 11 பந்தில் 21 ரன் எடுத்தார்கள். மற்றபடி யாராலும் அதிரடியாக விளையாடி ரன் எடுக்க முடியவில்லை. இந்திய அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்திருக்கிறது. ஆடம் ஜாம்பா மூன்று விக்கெட் வீழ்த்தினார். சரியான பேட்டிங் ஆர்டர் செல்லாததால் இந்திய அணியின் ஸ்கோர் குறைந்துவிட்டது.

- Advertisement -

கம்பீர் செய்த காரியம்

இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்ததும் யாரும் எதிர்பார்க்காத விதமாக உடனடியாக சிவம் துபேவை கம்பீர் மூன்றாவது இடத்தில் களம் இறக்கினார். அவரால் இந்த ஆடுகளத்தில் பெரிய மைதானத்தில் எதையும் செய்ய முடியவில்லை இறுதியாக 18 பந்தில் 22 ரன் எடுத்து ஆட்டம் இழந்துவிட்டார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா எங்களுக்கு இந்தியா மாதிரிதான்.. இன்னைக்கு நடந்த இந்த விஷயம் ரொம்ப நல்லது – சூரியகுமார் யாதவ் பேட்டி

தற்போது இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஓரளவு பேட்டிங் பார்ம்க்கு வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரை மூன்றாவது இடத்தில் அனுப்பாதது மேலும் ஏற்கனவே மூன்றாவது இடத்தில் சிறப்பாக விளையாடியிருக்கும் திலக் வர்மாவையும் அனுப்பாதது, சிவம் துபேவை தேவையில்லாமல் அனுப்பி போட்டியின் திசையை மாற்றிவிட்டதாக கம்பீரை கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -
Published by

Recent Posts