ஆஸ்திரேலியா எங்களுக்கு இந்தியா மாதிரிதான்.. இன்னைக்கு நடந்த இந்த விஷயம் ரொம்ப நல்லது – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
61
Surya

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லேண்ட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது.

இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது எந்த மாற்றத்தையும் செய்யாமல் மூன்றாவது போட்டியில் விளையாடிய அதே அணியை களம் இறங்குகிறது. வெற்றி பெற்ற அணியை மாற்ற இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நான்கு மாற்றம்

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து பல முன்னணி நட்சத்திர வீரர்கள் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராக வெளியில் சென்று விட்டார்கள். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி பலவீனமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சிறப்பான மாற்றங்களை செய்து ஆஸ்திரேலியா அணி பலமாக மாறி இருக்கிறது.

தற்போது விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா அணியில் ஜோஸ் பிலிப், கிளன் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் துவார்சியஸ் நால்வரும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஆடம் ஜாம்பா மற்றும் மேக்ஸ்வெல் மீண்டும் வந்திருப்பது ஆஸ்திரேலிய அணியை பலமானதாக மாற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்திய சூழ்நிலை போல் இருக்கிறது

இந்த போட்டி குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “அதற்காகத்தான் நாம் விளையாட விரும்புகிறோம். ஏனென்றால் இந்த சவால்கள் அவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது. ஒரு அழகான மைதானம். மேலும் இங்கு விளையாடுவதற்கு தயாரிப்புகள் சிறப்பாக இருந்தது. எங்களுக்கு ஒரு நாள் ஓய்வு கிடைத்தது. மேலும் நாங்கள் நேற்று நல்ல பயிற்சியும் செய்தோம். இந்த ஆடுகளம் இந்திய ஆடுகளம் போலவே இருக்கிறது. சூழ்நிலையும் இந்தியா போலவே இருக்கிறது. நாங்கள் நல்ல ரன் குவித்து சவால் கொடுப்போம்”

இதையும் படிங்க : 69 பந்துகள் 38 ரன்கள்.. அபிஷேக் சர்மாவுக்கு காத்திருக்கும் டி20 2 மெகா ரெக்கார்டுகள் – முழு விபரங்கள்

“இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்று நாங்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இங்கு விளையாட்டை பார்க்க நிறைய பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளுமே உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டிக்கு நான்கு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -