ஆசிய கோப்பை வெற்றி.. கோலிக்கு கம்பீர் மறைமுக தாக்கு.. ரோகித் சர்மாவுக்கு பாராட்டு

0
1965

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. பதினாறாவது ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம் 8-வது முறையாக ஆசிய கோப்பை கைப்பற்றி இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு முறை ஆசிய கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன்களின் வரிசையில் ரோஹித் சர்மா தன்னையும் இணைத்துக் கொண்டார். இதற்கு முன்பு 1991 மற்றும் 95 வருடங்களில் முகமது அசாருதீன் இரண்டு முறை இந்திய கேப்டனாக இருந்து ஆசிய கோப்பை போட்டிகளை வென்றிருக்கிறார். மேலும் மகேந்திர சிங் தோனி 2010 மற்றும் 2016 வருடங்களில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து ஆசிய கோப்பை வென்று இருக்கிறார்.

- Advertisement -

தற்போது ரோகித் சர்மா 2018 மற்றும் 2023 வருடங்களில் இரண்டு முறை ஆசிய கோப்பையை இந்திய அணிக்காக வென்று இருக்கிறார். மேலும் முகமது அசாருதீன் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இரண்டு இறுதிப் போட்டிகளில் பங்கேற்று இந்திய அணிக்காக இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்று இருக்கின்றனர். மகேந்திர சிங் தோனி மூன்று ஆசிய கோப்பை இறுதிப் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் கௌதம் கம்பீர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டினார். இதுகுறித்து பேசிய அவர் ரோகித் சர்மா ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றிருக்கிறார். ஆனாலும் சில கேப்டன்களால் ஒருமுறை கூட ஐபிஎல் பட்டத்தை வெல்ல முடியவில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கௌதம் கம்பீர் எந்த ஒரு வீரரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் மறைமுகமாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலியை தான் சுட்டிக்காட்டுகிறார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கிடையே தொடர்ந்து நடைபெற்று வரும் சில கசப்பான அனுபவங்களின் மூலம் கம்பீர், விராட் கோலியை தான் மறைமுகமாக ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார் என ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து பாராட்டு தெரிவித்த கம்பீர் அவருக்கு உண்மையான பரிசோதனை இன்னும் 15 நாட்களில் தான் நடைபெற இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தான் ரோகித் சர்மாவிற்கு உண்மையான டெஸ்ட் என குறிப்பிட்டுள்ள கம்பீர், இந்திய அணி உலக கோப்பை வெல்லவில்லை என்றால் ரோகித் சர்மாவின் மீது கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் நிச்சயமாக எழும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய கம்பீர் ” இந்திய அணியில் 15 முதல் 18 சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். நிச்சயமாக இந்த அணியால் உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் நிச்சயமாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் எழும். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோரின் மீதும் கேள்விகள் எழுந்தது என தெரிவித்த கௌதம் கம்பீர் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியடைந்த போது ராகுல் டிராவிட் மீது கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. அதேபோல் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்தபோது விராட் கோலியின் மீதும் கேள்விகள் எழுந்தது. தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் இந்தியா அணி வெல்ல தவறினால் இதே போன்ற கேள்விகள் ரோஹித் சர்மாவின் மீதும் எழும் என தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் கூறினேன் இன்னும் 15 நாட்களில் ரோகித் சர்மாவிற்கு நிஜமான டெஸ்ட் ஆரம்பமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.