ஹர்ஷித் ராணாவை குறி வைக்கிறது வெட்கக்கேடானது.. என்னை என்ன வேணாலும் செய்யுங்க – கம்பீர் கோபம்

0
23
Gambhir

இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை குறிவைத்து விமர்சனம் செய்வது வெட்கக்கேடானது என இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் கோபமாக தெரிவித்து இருக்கிறார்.

இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்று தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றியது. அதற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் கம்பீர் மிகவும் காட்டமான முறையில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கம்பீரின் செல்லப்பிள்ளை

தற்போது இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய வீரராக கில்லுக்கு பிறகு ஹர்ஷித் ராணா இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் மென்டராக கம்பீர் இருந்த காரணத்தினால் அவரது செல்ல பிள்ளையாக ஹர்ஷித் ராணா இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இதன் காரணமாகவே மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும், ஹர்ஷித் ராணா மிக மோசமாக செயல்பட்டால் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்குவதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக கம்பீர் இதுபற்றி பதிலளித்திருக்கிறார்.

- Advertisement -

இது வெட்கக்கேடானது

இது குறித்து கம்பீர் பேசும் பொழுது “நீங்கள் 23 வயதான இளம் வீரர் ஹர்சித் ராணாவை குறி வைப்பது கொஞ்சம் வெட்கக்கேடானது. ஹர்ஷித் ராணாவின் அப்பா முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கிடையாது. ஒரு தனி நபரை குறி வைப்பது மிகவும் மோசமானது. சோசியல் மீடியாக்களில் அவரை டிரோல் செய்வது நியாயமில்லாதது”

இதையும் படிங்க : கம்பீர் பாய் அப்படி சொன்னதால.. வேற மாதிரி யோசிக்கிறன்.. இல்லனா வேல்யூ இருக்காது – ஜடேஜா பேச்சு

“நீங்கள் அவருடைய மனநிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் பிறந்த எந்த குழந்தையும் கிரிக்கெட் விளையாடலாம். இந்தியாவில் கிரிக்கெட் சிறப்பாக நடப்பதற்கான தார்மீக பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. யூடுப் சேனலில் உங்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பதற்காக கண்டதையும் பேச வேண்டாம். குறி வைப்பதாக இருந்தால் என்ன என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் அந்த குழந்தையை விட்டு விடுங்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -