இந்திய கிரிக்கெட்

இப்ப என் குடும்பத்தை விட இவங்ககிட்டதான் நிறைய விஷயத்தை சொல்றேன்.. அதை வெளியில கொண்டு வரணும் – கம்பீர் பேச்சு

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பது எப்படியானதாக உள்ளது என்பது குறித்து கம்பீர் மனம் திறந்து நிறைய விஷயங்களை பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு இந்திய அணி பல வரலாற்று தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அதே சமயத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியான அணுகுமுறையுடன் உலகில் யாருக்கும் சவால் கொடுக்கும் அணிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நெருக்கடி தருணங்கள்

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பொழுது நிறைய அதிர்வலைகள் காணப்பட்டது. அவர் அதிரடியான பல மாற்றங்களை இந்திய கிரிக்கெட்டில் செய்வதற்கு முயற்சி செய்ததை பல வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மறைத்து வைக்க வேண்டிய பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.

தற்போது அவருக்குப் பிறகு கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்ததும் அப்படியான விஷயங்கள் மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்திய அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகவும் வலிமையாகவும் மாறி இருக்கிறது. இதன் காரணமாக அவருடைய செயல்பாடு இரண்டு விதமாகவும் இருக்கிறது.

- Advertisement -

இவர்களிடம்தான் பகிர்ந்து கொள்கிறேன்

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “இங்கு உங்கள் வழியில் விஷயங்கள் நடக்காத பொழுது அது மிகவும் நெருக்கடியானதாக மாறிவிடுகிறது. எனவே உங்களுக்கு நம்பகமான அணி துணை ஊழியர்கள் இருக்கும் பொழுது அவர்கள் உங்கள் குடும்பம் போலவே ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால் நீங்கள் அவர்களுடன் பல உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் நம்முடைய வழியில் விஷயங்கள் செல்லாத போது நம்முடைய உணர்ச்சிகள் எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு புரியும்”

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் ஓபன் பண்ண போறாரா?.. 12 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள்.. வெளியான புதிய செய்திகள்

“வீரர்கள் தங்கள் இயல்பில் இருக்கக்கூடிய நேரங்களும் உண்டு. அவர்கள் வேடிக்கையாக சிலர தருணங்களில் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அப்படி வேடிக்கையான குணத்தை வெளியில் எடுத்துக் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். ஏனென்றால் அப்பொழுதுதான் அணியை மகிழ்ச்சியாக சூழ்நிலையை சிறப்பாக வைத்திருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts