வாஷிங்டன் சுந்தர் ஓபன் பண்ண போறாரா?.. 12 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள்.. வெளியான புதிய செய்திகள்

0
4
Ishan

இன்று நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக வாஷிங்டன் சுந்தர் களம் இறங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என செய்திகள் வெளியாகி ஆச்சரியப்படுத்தி உள்ளன.

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இன்று இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் டெல்லியில் வைத்து நமிபியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கை சென்று கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

மகிழ்ச்சியான செய்தி

இந்த டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் முதல் போட்டியில் காய்ச்சல் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெறவில்லை. இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் முற்றிலுமாக சரியாகி இன்றைய போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல நியூசிலாந்து ஒருநாள் தொடரில் காயமடைந்து அதற்கடுத்து விளையாடாமல் இருந்து வரும் வாஷிங்டன் சுந்தர் முழுவதுமாக உடல் தகுதி பெற்று விட்டார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு வீரர்களும் திரும்பி வருவது இந்திய அணியின் காம்பினேஷனை பெரிய அளவில் பலமாக்கும்.

- Advertisement -

மோசமான செய்திகள்

அதே சமயத்தில் பும்ரா போலவே அபிஷேக் ஷர்மாவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் இதற்காக மருத்துவமனை சென்று நேற்று திரும்பி வந்திருக்கிறார். மேலும் இரண்டாவது போட்டிக்கான எந்த பயிற்சியிலும் அபிஷேக் ஷர்மா ஈடுபடவில்லை. எனவே சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : 2003ல் இங்கிலாந்து என்ன பண்ணுச்சு?.. நாசர் நீங்கதான் அப்ப கேப்டன்.. மறந்துட்டு பேச வேணாம் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

அதே சமயத்தில் நேற்று பும்ரா பந்துவீச்சில் இஷான் கிஷான் காலில் காயம் அடைந்துள்ளார். எனவே அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. அவர் விளையாடாவிட்டால் ஒரு பேட்மேன் ஆக வாஷிங்டன் சுந்தர் துவக்க வீரராக களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்துள்ள அனைவரும் திரும்பி வரவேண்டிய கட்டாய சூழ்நிலை எழுந்திருக்கிறது.

- Advertisement -