இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் ஃபார்ம் குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும், தங்களுடைய தத்துவமே வேறு என்றும் இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தொடங்க இருக்கும் டி20 தொடருக்கு முன்பாக, சூரியகுமார் யாதவ் மற்றும் இந்திய டி20 அணியின் அணுகுமுறை குறித்து கம்பீர் மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “எனக்கு சூர்யாவின் பேட்டிங் பாடம் குறித்து எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் நாங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் ஆக்ரோஷமாக விளையாடுவது குறித்து உறுதி செய்திருக்கிறோம். இந்த தத்துவத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால் தோல்விகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சூர்யா 30 பந்துகளில் 40 ரன்கள் எடுப்பதாக இருந்தால் ஈஸியாக இருக்கும். ஆனால் நாங்கள் ஆக்ரோஷமாக விளையாடுவதையும், அதனால் ஏற்படும் இழப்புகளை சந்திக்கவும் உறுதி ஏற்று இருக்கிறோம்”
“தற்போது அபிஷேக் ஷர்மா நல்ல பார்ம்பில் இருக்கிறார். ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் அதை அவர் தக்க வைத்திருந்தார். அடுத்து சூர்யா சிறப்பாக விளையாடும் பொழுது அவர் அதை முன்னெடுத்துச் செல்வார். டி20 கிரிக்கெட்டில் எங்களுடைய கவனம் தனிப்பட்ட வீரர்கள் ரன்களில் இல்லை. மாறாக நாங்கள் விளையாடும் கிரிக்கெட் ப்ராண்டில் உள்ளது. நாங்கள் விளையாடும் முறையின் காரணமாக பேட்ஸ்மேன்கள் தோல்வி அடையலாம். இங்கு ரன்களை விட தாக்கம்தான் முக்கியம்”
“சூர்யா சிறந்த மனிதர். நல்ல மனிதர்கள்தான் நல்ல தலைவர்களாக உருவாகிறார்கள். அவர் என்னை புகழ்ந்து பேசினாலும் கூட, விளையாட்டின் அடிப்படையில் அவருக்கு சரியான ஆலோசனை வழங்குவதே என்னுடைய பங்கு. மற்றபடி இது அவருடைய அணி. அவருடைய சுதந்திரமான மனப்பாங்கு இயல்பாக டி20 கிரிக்கெட்டுக்கு சரியாக பொருந்துகிறது”
இதையும் படிங்க : இந்தியா, ஆஸ்திரேலியா முதல் டி20 அணி.. பிளேயிங் லெவன் அறிவித்த முன்னாள் வீரர்.. முக்கிய வீரர் இல்லை
“உங்களுக்கு களத்திற்கு வெளியே இருக்கும் ஆளுமை களத்திற்கு உள்ளே மற்றும் ட்ரெஸ்ஸிங் ரூமில் பிரதிபலிக்கிறது. மேலும் சூர்யா இதைக் கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பாக பராமரிப்பு வருகிறார். எங்கள் முதல் உரையாடலில் இருந்தே நாங்கள் தோற்பதற்கு அஞ்ச மாட்டோம் என்று முடிவு செய்து விட்டோம். நான் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்க வேண்டும் என நினைக்கவில்லை. நான் அச்சமற்ற அணியை உருவாக்க வேண்டும்” என்று நினைக்கிறேன்.