இந்தியா, ஆஸ்திரேலியா முதல் டி20 அணி.. பிளேயிங் லெவன் அறிவித்த முன்னாள் வீரர்.. முக்கிய வீரர் இல்லை

0
289

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக தனது இந்திய அணியின் 11 வீரர்கள் கொண்ட பட்டியலை முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் தேர்வு செய்தார். இரு அணிகளும் இடையிலான முதல் டி20  அக்டோபர் 29 அன்று கான்பெராவில் தொடங்கும்.

இந்தப் போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசிய பார்த்திவ் படேல், அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரை தொடக்க வீரர்களாக தேர்வு செய்தார். பின்னர், திலக் வர்மா மற்றும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கு தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

அபிஷேக் மற்றும் திலக் அற்புதமான ஃபார்மில் உள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை 2025-ல், அபிஷேக் ஏழு போட்டிகளில் 314 ரன்கள் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். திலக் ஆறு இன்னிங்ஸ்களில் 213 ரன்கள், சராசரி 71 என்ற விகிதத்தில் எடுத்தார்.

பார்த்தீவ் பட்டேல் அணி:

பார்த்திவ், சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐந்தாவது இடத்தில் தேர்வு செய்தார்.  பின்னர் ஆக்ஸர் படேலை ஒரே சுழற்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுத்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை அவர் விடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை முன்னணி பந்துவீச்சாளர்களாக தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

ஆல் ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளராக சிவம் துபே மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியை இரு வேகப்பந்து ஆல்-ரவுண்டர்களாக சேர்த்தார்.  பார்த்தீவ் பட்டேல் தேர்வு செய்த இந்திய டி20 அணி: அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ, சஞ்சு சாம்சன், ஆக்ஸர் படேல், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.

இந்தியாவின் டி20 ரெக்கார்ட்:

இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. ஆஸ்திரேலியா முதல் போட்டியை ஏழு விக்கெட்டுகளாலும், இரண்டாவது போட்டியை இரு விக்கெட்டுகளாலும் வென்றது. இந்திய அணி இறுதிப் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20.. சுழற்பந்துவீச்சாளரை தேர்வு செய்வதில் குழப்பம்.. இதை பாருங்க

சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் ஆசிய கோப்பை 2025-ஐ வென்று சிறப்பான ஃபார்மில் உள்ளது. இந்திய அணி கடந்த 2020-21-ல் ஆஸ்திரேலியாவில் விளையாடிய டி20 தொடரில் வெற்றி பெற்றது. அந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. . முந்தைய தொடருடன் ஒப்பிடுகையில் புதிய தோற்றத்தில் உள்ள இந்த அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சவாலை எதிர்கொள்ளவுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டி20-யில் சிறப்பான ரெக்கார்ட் வைத்துள்ளது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் ஏழில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -