எனக்கு சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. சூப்பர் டீம்தான் வேணும்.. நான் அதை செய்வேனு நம்புறேன் – கம்பீர் பேச்சு

0
11
Gam

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் சூப்பர் ஸ்டார்களை உருவாக்க மாட்டேன் எனவும் சூப்பர் அணியை உருவாக்குவதே தன்னுடைய நோக்கம் என்றும் கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டு ஐசிசி தொடர்களை வென்ற ஒரே நபராக கவுதம் கம்பீர் சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் தனக்கு சூப்பர் ஸ்டார் வேண்டாம் என்று கூறி அதிரடியை ஏற்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் கொள்கை

தற்போது இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது கிரிக்கெட் உலகில் நிறைய ரசிகர்களை கொண்டிருக்கும் இரண்டு வீரர்கள் இவர்கள்தான்.

அதே சமயத்தில் கம்பீர் ஆரம்பத்தில் இருந்து ஒரு வீரரை சூப்பர் ஸ்டார் ஆகவும் கடவுள் போலவும் ரசிகர்கள் கொண்டாடுவதில் தனக்கு உடன்பாடு கிடையாது என கூறி வந்திருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.

- Advertisement -

சூப்பர் அணிதான் வேண்டும்

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “ஊடகங்கள் எப்பொழுதும் ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்க முயற்சி செய்கின்றன. ஆனால் ஒரு பயிற்சியாளராக என்னுடைய வேலை சூப்பர் அணியை உருவாக்குவதுதான். நான் அனைவரையும் பாரபட்சமின்றி நேர்மையாக சமமாக நடத்த வேண்டும். எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கக்கூடிய 15 வீரர்களும் சமமானவர்களே”

இதையும் படிங்க :அக்சர் படேல் ஆட வைக்காததால என் மேல் கோபமா இருந்தார்.. நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன் – சூரியகுமார் தகவல்

“நான் ஒருவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள், ஊடகங்களில் அந்த வீரருக்கு எவ்வளவு டிஆர்பி ரேட் இருக்கிறது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். ஒரு வீரர் அணிக்கு எப்படியான பங்களிப்பை செய்கிறார் என்று மட்டும்தான் பார்ப்பேன். எனது பதவி காலம் முடிவதற்குள் நான் ஒரு சூப்பர் அணியை உருவாக்குவேன் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -